வாழைச்சேனையில் கைகலப்பு ஐந்துபேர் வைத்தியசாலையில் அனுமதி. (படங்கள்)

0
2509

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாழைச்சேனை தபாலதிபர் வீதியில் இயங்கிவரும் அல் ஹிக்மா இஸ்லாமிய நிலையத்தில் இன்று (4) ம் திகதி வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சகோதரர்கள் மீது சில குழுவினர் திடீரென்று அத்துமீறி உட்புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சந்தர்ப்பத்தில் அவ் வாக்குவாதம் கைகலப்பானதில் அந்நிலையத்திலிருந்த ஐந்துபேர் பேர் காயப்பட்ட நிலையில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் 2011 ம் ஆண்டு காலமாக தற்காலிக இடத்தில் இயங்கி வந்த இவ் இஸ்லாமிய நிலையம் ஒருவருட காலமாக நிரந்தரமான இடத்தில் இயங்கி வருகின்றது அங்கு சிறுவர்களுக்கான குர்ஆன் மத்ரசா, ஆண்கள் பெண்களுக்கான மார்க்க சொற்பொழிவுகள், மற்றும் ஐவேளை தொழுகைகள் போன்றவைகள் அப்பிரதேச மக்களின் ஒத்துளைப்புக்களோடு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றுவந்தது இதனை குழப்பியடிக்க வேண்டும் என்று, சிலர் குறித்த இஸ்லாமிய நிலையத்தை மூடுமாறும் அதில் எவ்விதமான வணக்க வழிபாடுகளிலும் ஈடுபடவேண்டாம் என்றும் அச்சுறுதல் விடுக்கப்பட்டதையடுத்து குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

எனவே இவ் இஸ்லாமிய நிலையத்தையும் அங்கிருந்தவர்களையும் தாக்குவதற்காக  பல பிரதேசங்களில் இருந்து திட்டமிட்டு வந்துள்ளதாக்கவும், வருகை தந்தவர்கள் ரவுடிக்கும்பல் போல் நடந்து கொண்டதாகவும், புனித ரமழான் மாதத்தையும் கருத்திற்கொள்ளாமல் தகாத வார்த்தைப் பிரயோகங்களால் ஏசியதாகவும், தாக்கியதாகவும் நேரில் கண்ட பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நடந்த இடத்துக்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here