மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்

0
142

பமுணுகம, புபுதுகம பிரதேசத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துவிட்டு கணவனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இருவருக்கிடையில் ஏற்பட்ட முறுகல் நிலையே கொலைக்கு காரணம் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மனைவியை கொலை செய்துவிட்டு, கணவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

புபுதுகம பிரதேசத்தில், 09வது ஒழுங்கையில் வசிக்கும் 46 வயதுடைய மனைவியும் 47 வயதுடைய கணவனுமே உயிரிழந்துள்ளனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  பொலிஸார்  ஆரம்பித்துள்ளனர்.

(அட)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here