கோறளை மத்தியில் வட்டியில்லா கடனுதவி

0
311

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாவடிச்சேனை பெண் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் வட்டியில்லா கடன் தொகை வழங்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.எல்.றியாஸ், சமூக சேவை உத்தியோகத்தர் அ.நஜீம், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ரி.தரணிதரன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.வை.ரதீஸ்குமார், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.எம்.மன்சூர், மாவடிச்சேனை கிராம அதிகாரி ஏ.எல்.எம்.ஜௌபர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது மாவடிச்சேனை பெண் முயற்சியாளர் சமூக மேம்பாட்டு அமைப்பினால் ஐந்து இலட்சத்து ஐயாயிரம் ரூபாவினை பதினைந்து பேருக்கும், மாவடிச்சேனை பெண் கிராம அபிவிருத்தி சங்கத்தினால் ஐந்து இலட்சத்து பத்தாயிரம் ரூபாவினை பதினேழு பேருக்குமாக பிரித்து வட்டியில்லா கடனாக வழங்கி வைக்கப்பட்டது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன் திட்டத்தில் பல பெண் முயற்சியாளர்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கடன்களை பெற்றுக் கொண்டு அதிக வட்டியினால் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அந்த வகையில் வறிய மக்களை நுண்கடனில் இருந்து பாதுகாக்கும் வகையில் பெண்கள் அமைப்புக்களிடம் உள்ள பணங்களை கொண்டு வட்டியில்லா கடன் திட்டத்தினை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம் மேற்கொண்டு வருவதாக பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் நான்காவது தடவையாக வட்டியில்லா கடன் திட்டத்தின் மூலம் பண உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here