வாழைச்சேனை சம்பவம் தொடர்பில் சமரசம் செய்ய அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கல்குடாவுக்கு விஜயம்.

0
398

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கடந்த 04ம் திகதி திங்கட்கிழமை வாழைச்சேனை தபாலதிபர் வீதியில் அமைந்துள அல் ஹிக்மா இஸ்லாமிய நிலையத் தாக்குதல் மற்றும் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக தாக்கியது தொடர்பில் உண்மைநிலையை அறிந்து கொள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் முக்கிய குழுவினர் நேற்று (6) ம் திகதி கல்குடா பிரதேசத்துக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழுத்தலைவர் ஐ.எல்.எம். காசிம் சூரி அவர்களின் தலைமையில் வருகைதந்த குழுவினர் கல்குடா ஜம்இய்யத்துல் உலமாவினையும், வாழைச்சேனையில் எட்டுப்பள்ளிகளையும் உள்ளடக்கிய நிருவாகத்தினரையும், கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் நிருவாகத்தினரையும் தனித்தனியே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் சந்திப்பானது மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் அதன் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது இதில் ஜம்ய்யாவின் உறுப்பினர்கள் மற்றும் வாழைச்சேனை நிலவரத்தில் பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மற்றும் கல்குடா ஜம்இய்யது உலமா பிரதிநிதிகள் போன்றோர்கள் கலந்து கொண்டனர். இப்பிரதேசத்தில் ஜம்இய்யா மேற்கொள்ளுகின்ற தஃவா திட்டங்கள், அதனால் ஏற்பட்ட நெருக்கடிகள் போன்றவை அச் சந்திப்பில் அலசி ஆராயப்பட்டு பேசப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

எதிர்காலங்களில் இருதரப்பும் இப்பிரதேசங்களில் முரண்பாடுகளை வளர்த்துக்கொள்ளாமல் தங்களுடைய கடமைகளை செய்யுமாறு பல்வேறுபட்ட ஆலோசனைகளை வழங்கியதோடு நடைபெற்ற பிரச்சனை தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று பெருநாள் முடிந்ததும் கொழும்பு தலைமையகத்தில் நடைபெறவுள்ளதாகவும் அதில் இருதரப்பு பிரதிநிதிகளும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here