அமைச்சர் ரிசாட்யின் வழிகாட்டலில் இடம்பெறும் வட்டார ரீதியிலான இப்தார் நிகழ்வு

0
516

(செளக்கத்தலி முகம்மட் றிஸ்வி)

தேர்தல் காலங்களில் மாத்திரம்தான் அரசியல் கட்சிகள் இப்தார் செய்யும் என்ற பிழையான எண்ணத்தை தகர்தெறிந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் வாணிப கைத்தொழில் அமைச்சருமான கெளரவ அல்ஹாஜ் றிஸாட் பதியூதீன் அவர்களின் வழிகாட்டலிலும், அதன் தவிசாளரும் கடற்தொழில் நீரியல்வள கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான கெளரவ. அல்ஹாஜ் அமீர் அலி அவர்களின் நெறிப்படுத்தலினூடாகவருடம் தோறும் நடாத்தப்பட்டுவரும் இப்தார் நிகழ்வு இம்முறையும் வட்டார ரீதியாக இடம்பெற்று வருகின்றது.

அந்த வகையில் ஓட்டமாவடி 01 208டீ வட்டாரக் கிளையின் இப்தார் 06.06.2018 புதன் கிழமை மிக சிறப்பாக மட் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது, இந் நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் எச்.எல்.எம்.கலீல் அவர்களும், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் எச்.எம். அமீர்ஆசிரியர், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எம். தையிப் ஆசிரியர் மற்றும் கல்குடா மத்திய குழு செயலாளர் அ. அக்பர், ஆலோசகர் சட்டத்தரணி ராசிக் அவர்களும் கெளரவ பிரதியமைச்சரின் புதல்வர் டொக்டர் அப்தாப் அலி உட்பட பல அதிதிகளும், ஏராளமான பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here