JDIK யின் அனுசரணையில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் இப்தார் நிகழ்வு.

0
80

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா (JDIK) யின் அனுசரணையில் இலங்கை கிழக்கு பல்கழைக்கலகத்தில் இடம்பெற்ற இப்தார் நிகழ்வு நேற்று பல்கலைக்கழக பிரதான மண்டமத்தில் நடைபெற்றது.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ் இப்தார் நிகழ்வில் அதிதியாக ஜம்இய்யாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் காஸிமி, ஜம்இய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க் எச்.எல். முகைதீன் பலாஹி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்கள் பல்கலைக்கழகத்தில் மாணவ சமூகம் பிர மாணவ சமூகத்துக்கு மத்தியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும், நம்முடைய கலாச்சாரத்துக்கும் பண்பாட்டிக்கும் கலங்கம் ஏற்படாத வண்ணம் நம்முடைய கல்வி நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார் .

ஜம்இய்யாவின் செயலாளர் எச்.எல். முகைதீன் பலாஹி அங்கு பேசுகையில்,

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா அமைப்பானது சமூகத்திஙக்கு பல்வேறுபட்ட சேவைகளை தொடந்தேர்ச்சியாக செய்து வருகின்றது குறிப்பாக மாணவ சமூகம் கல்வி கற்பாதற்கான உதவிகள் மற்றும் சமூகசேவைகள் தஃவா நிகழ்ச்சிகள் போன்றவற்றை சுட்டிக்காட்டி பேசியமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here