வாழைச்சேனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இன நல்லுறவை பேணும் இப்தார் நிகழ்வு

0
235

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

வாழைச்சேனை வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இன நல்லுறவை பேணும் வகையில் இப்தார் நிகழ்வு நேற்று மாலை வாழைச்சேனை ஜும்ஆப் பள்ளிவாயல் அமீர் அலி கடைத் தொகுதியில் இடம்பெற்றது.

வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ஐயூப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்

மேலும் அதிதிகளாக வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்கள்; வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், வாழைச்சேனை பிரதேச சபை செயலாளர் எஸ்.தினேஸ்குமார், வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் தலைவர் கலந்தர் பாவா, வர்த்தக சங்கத்தினர்கள் மற்றும் பிரதேசத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், வர்த்தக சங்கத்தின் தலைவர் எஸ்.ஐயூப் ஆகியோர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன், வாழைச்சேனை வர்த்த நிலையங்களுக்கான பாதுகாப்பு கடமை பொறுப்பாளராக ஆறு வருடங்களாக கடையாற்றும் ஏ.எல்.அசார்தீன் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here