ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் புலமைப் பரிசில் பெறுபேற்றை உயர்த்த திட்டம்

0
409

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஓட்டமாவடி கோட்டத்தில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி பெறுபேற்றை மட்டத்தினை அதிகரிக்கும் வேலைத் திட்டத்திற்கான முதலாம் கட்ட நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கடற்தொழில் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலய உதவி தூதுவர் என்.எம்.அனஸ்  ஓட்டமாவடி கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றகுமான், அமீர் அலி பவுண்டேசன் அமைப்பின் பிரதி தவிசாளர் வைத்தியர் எஸ்.ஏ.ஏ.அப்தாப் அலி மற்றும் ஓட்டமாவடி கோட்ட பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் காலங்களில் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவர்கள் சித்தி பெறும் புள்ளிகளை பெறுவதில் ஏற்பட்ட சவால்களை முறியடிக்கும் முகமாக அமீர் அலி பவுண்டேசன் அனுசரனையில் இவ்வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள இருபத்தி இரண்டு பாடசாலைகளில் இருந்து ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் கல்வி மட்டத்தை உயர்த்தும் வகையிலும், கல்விக் கோட்டத்தை முதன்மை பெற செய்யும் வகையிலும் இவ்வேலைத் திட்டம் அமையப்பெறவுள்ளது.

அந்த வகையில் மாணவர்கள் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெறும் வகையில் கல்வியை மேன்படுத்த அமீர் அலி பவுண்டேசன் தொடர்ந்தும் பங்களிப்பு செய்யும் என பிரதியமைச்சரும்ää அமீர் அலி பவுண்டேசனின் தவிசாளருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

அத்தோடு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களுடனான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பான விஷேட கலந்துரையாடலும், அதன் பின்னர் பாடசாலையில் இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here