மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விபத்து, அவசர சிகிச்சைப்பிரிவு திறப்புவிழா

0
379

(மீராவோடை யாசீன்)

இலவச சுகாதார சேவையின் பிரதிபலனை இலங்கை மக்களுக்கு வழங்கும் குறிக்கோளை இலக்காகக் கொண்டு இலங்கை அரசாங்கம் மற்றும் இலங்கையின் தேசிய காயங்களுக்கான சேவைக்கு உதவும் மன்றம் என்பவற்றின் நிதி ஒதிக்கீட்டின்கீழ் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எம்.எஸ். இப்ரா லெவ்வை அவர்களின் அயராத முயற்சியின் பலனாக புதிதாக அமைக்கப்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு திறந்து வைக்கப்படவுள்ளது.

இதில் ஆய்வுகூடத் தகவல் முகாமைத்துவத் தொகுதி ஆரம்பித்து மற்றும் இருதய நோய் சிகிச்சைப்பிரிவு மற்றும் சிறு நீரக சிகிச்சைப் பிரிவுக்கான கட்டுமானத் தொடக்க விழா போன்றவை இடம்பெறவுள்ளன. கௌரவ எதிர்க் கட்சித்தலைவர் ஆர்.சம்மந்தன், கௌரவ சுகாதாரப் போசனை மற்றும் சுதேச வைத்தியப் பிரதியமைச்சர் பைசால் காசிம் ஆகியோர்களின் பங்கேற்புடன் இலங்கை ஜனனாயக சோசலிசக் குடியரசின் கௌரவ சுகாதார போசனை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரத்ன அவர்களின் தலைமையில் மட்டு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தினைக்கள அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இந்நிகழ்வு எதிர்வரும் 2018 ஜூன் 17ம் திகதி மு.ப.11மணிக்கு மட்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் வைபவ ரரீதியாக நடைபெறவுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here