மன்னாரைச் சேர்ந்த சகோதரர்களின் சடலங்களே புங்குடுதீவில் கரை ஒதுங்கின

0
262
(பாறுக் ஷிஹான்)
யாழ்ப்பாணம், தீவகம் புங்குடுதீவு கடற்கரைப் பகுதியில் இருவேறு இடங்களில் ஆண்கள் இருவரின் சடலங்கள் சகோதரர்களுடையன என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 7ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலையில் தலைமன்னார் கடற்கரையில் இருந்து கடற்தொழிலுக்குச் சென்ற மீனவர்கள் இருவரின் சடலமே இவ்வாறு கரை ஒதுங்கின என்று அவர்களது உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
தோமஸ் கிறிஸ்டியன் பூஞ்சன் (வயது -38), தோமஸ் ஆரோக்கிய எமில்டன் (வயது -32) என்ற சகோதரர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நண்டு வலை பயன்படுத்தி ஒரு பைபர் படகில் மீன்பிடிக்க இந்த சகோதரர்கள் இருவரும் கடந்த வியாழக்கிழமை தலைமன்னார் கடற்பகுதிக்குச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில் அவர்கள் தொழிலுக்குச் சென்ற படகு புங்குடுதீவில் கரை ஒதுங்கியதது.
தற்போது மீனவர்களின் சடலங்களும் நேற்று(13)  கரை ஒதுங்கியுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here