மாஞ்சோலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் நடைபெற்ற பெருநாள் தொழுகை.

0
508

புனித நோன்பு பெருநாள் தொழுகை ஓட்டமாவடி மாஞ்சோலை ஹிழ்ரிய ஜூம்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
மாஞ்சோலை அல்-ஹிரா விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற பெருநாள் தொழுகையினையும்,குத்பா பேருரையினையும் மௌலவி ஏ.எஸ்.றியாஸ் ஸஹ்வி நடாத்தி வைத்தார்.

இதன் போது ஆண்களும்,பெண்களுமாக பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

 

(பாறுக் ஷிஹான்)

‘ஈதுல் பித்ர்’ எனும் நோன்புப்பெருநாள் பெருநாள் தொழுகை யாழ்ப்பாணம் ஜின்னா மைதானத்தில் நேற்று(16) சிறப்பாக நடைபெற்றது.

யாழ் கிளிநொச்சி உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல் நிர்வாக சகையினரும் இணைந்து ஏற்பாடு செய்த முஸ்லிம் வட்டார மக்களுக்கான
இப் பெருநாள் தொழுகை ஏற்பாடுகள் மௌலவி அப்துல் அஸீஸ் (காசிமி) தலைமையில் நடைபெற்றது.இதேவேளை வழமை போன்று பெண்களுக்கான தொழுகையும் அதே இடத்தில் உள்ள ஒஸ்மானியா கல்லூரி உள்ளக வளாகத்தில் நடைபெற்றது.

அத்துடன் நேற்று யாழ் ஜின்னா மைதானத்தில் தௌஹீத் ஜமாத் அமைப்பின் பெருநாள் தொழுகை அஷ்-ஷெய்க் பைசல் (மதனி) தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here