JDIK யின் பெருநாள் ஒன்றுகூடலும் கலை,கலாசார நிகழ்வும்.

0
586

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா – கல்குடா தெளஹீத் ஜமாஅத்தின் பெருநாள் ஒன்றுகூடலும் இஸ்லாமிய வரையறைக்குட்பட்ட கலை, கலாசார நிகழ்வும் நேற்று (22) நாவலடி மர்கஸ் அந்நூர் கலாபீட வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏராளமான சகோதரர்கள் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் தஃவாப் பணியில் தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட மறக்க முடியாத பல்வேறுபட்ட தகவல்களை துணைத்தலைவர் எஸ்.எச்.அரபாத் சஹ்வி பகிர்ந்துகொண்டார். அத்தோடு கல்குடா தொகுதியில் ஏகத்துவக் கொள்கையின் வளர்ச்சிகள் பற்றியும் அதனை முன்னெடுத்து செல்வதால் ஏற்படும் பல்வேறுபட்ட தடங்கள் பற்றியும் அதனை எதிர்கொள்ளும் முறைகள் பற்றியும் ஜம்இய்யாவின் நிருவாகத் தலைவர் ஏ ஹபீப் காசிமி எடுத்துரைத்தார்.

தொடர்ந்தும் இச்சிறப்பு நிகழ்வில் வருகைதந்த பலர் வயது வித்தியாசமின்றி தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டினார்கள் இதில் பாடல், கிராஅத், கவிதை, சுவாரஸ்யமான கதைகள், நமது பிரதேசங்களில் வராலாறுகள் போன்றவை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here