கடன் சுமைலிருந்த நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

0
296

(பாறுக் ஷிஹான்)

வேலணை அம்பிகை நகரில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

வேலணை 7 ஆம் வட்டாரத்தை சேர்ந்த தர்மலிங்கம் சஞ்சயன் (கணேசமூர்த்தி) என்பவரே இவ்வாறு இன்று (ஜூன் 26) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

இது தொடர்பில் தெரியவருவதாவது

தனியார் பேருந்து உரிமையாளரான இவர் சிறிதுகாலம் கடன்சுமை காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று தெரிவிக்கப்படுவதுடன் இவரது சடலம் ஒரு பற்றைக் காணிக்குள்ளிருந்து முழங்கால் நிலத்தில் தொடும் படியாக அரைகுறையாக தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மக்கள் தெரிவிப்பதுடன் குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here