இனங்கிடையே நல்லுறவை ஏற்படுத்தும் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் சமூகப்பணி

0
348

(அபூ இன்ஷிபா)

மக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் 8வது ஆண்டு சிறுவா் சங்கம நிகழ்வு மற்றும் விளையாட்டு போட்டிகளும் கடந்த 23.06.2018 சனிக்கிழமை பறங்கியாமடு கடற்கரை வீதியில் அமைந்துள்ள லங்கா லோ்னிங் சென்டரில் சிறப்பாக நடைபெற்றது.

வருடா வருடம் இனங்களுக்கிடையே உறவைப்பேணும் வகையில் மக்களுக்கு உதவும் மக்கள் மன்றத்தின் ஸ்தாபகா் து. வின்சன் பிரான்சிஸ் அவா்களின் ஒழுங்கமைப்புடன் வருடாந்தம் நடைபெறும் இந்நிகழ்வில் கிழக்கு மாகாணத்தின் பல பிரதேசத்திலிருந்து சுமார் 2000 க்கும் மேற்பட்ட பாடசாலை சிறார்கள் அங்கு நடைபெற்ற நிகழ்வில் இன, மத வேறுபாடின்றி ஆர்வத்துடன் கலந்துகொண்டனா். மற்றும் ஜோ்மன் நாட்டு பிரஜைகள், பிரதேச முக்கியஸ்தா்கள் என பலரும் இந்நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்டனா்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் பாடசாலை சிறார்களுக்கு பாடசாலை பொருட்கள் அடங்கிய பொதியொன்று வழங்கி வைப்பதோடு கல்குடாத்தொகுதி முஸ்லிம் பாடசாலைகளிலிருந்து சுமார் 200 மாணவா்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இனங்களிடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவது காலத்தின் தேவையே

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here