ஓட்டமாவடி முகைதீன் போடியார் வீதி அபிவிருத்திக்கு பிரதியமைச்சர் அமீர் அலி 1.5 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு

0
159

(செளக்கத்தலி முகம்மட் றிஸ்வி)

சேதமடைந்து காணப்படும் ஓட்டமாவடி முகைதீன் போடியார் வீதியை கொங்கிரீட் இட்டு புனர்நிர்மாணம் செய்வதற்கு கிராமிய பொருளாதார அபிவிருத்தி, நீர் வள மீன்பிடி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தனது கிராமிய பொருளாதார அபிவிருத்தியமைச்சின் நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய்களை ஒதுக்கீடு செய்துள்ளார்.

நீண்ட காலங்களாக கவனிப்பாரற்ற நிலையில், பொது மக்கள், மாணவர்களுக்கு பெரும் அசெளகரியங்களை ஏற்படுத்தி வந்த முகைதீன் போடியார் வீதி தொடர்பில் கடந்தாண்டின் இறுதிப்பகுதியில் பிரதேச மக்கள் பிரதியமைச்சரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு பிரதியமைச்சர் அமீர் அலி வாக்குறுதி வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here