வரலாற்றில் முதற்தடவையாக மீராவோடை மண்ணில் எம்.சி.ஆர். மருந்தகம் திறந்து வைப்பு.

0
510

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பொதுச் சந்தை கட்டடத் தொகுதியில் வரலாற்றில் முதல் தடவையாக எம்.சி.ஆர். மருந்தகம் இன்று (29) ம் திகதி வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இப் பிரதேசத்தில் இம் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ளதால் மீராவோடை முஸ்லிம், மீராவோடை தமிழ், பதுரியா நகர், மாஞ்சோலை, கிண்ணையடி ஆகிய கிராம மக்களும் மற்றும் இன்னும்பல பிரதேச மக்களும் இலகுவான முறையில் இம் மருந்தகத்தினூடக பயன் பெற்றுக் கொள்ள முடியுமென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இம் மருந்தகத் திறப்புவிழா நிகழ்வில் பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அபிவிருத்தி, நீர் வள மீன்பிடி பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்கள் கலந்து கொண்டதோடு ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் அரசியல் பிரமுகர்கள், உலமாக்கள், ஊர்ப்பிரமுகர்கள், எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இம் மருந்தகத்தின் மற்றுமொரு பகுதியில் மிக விரைவில் இரத்தப் பரிசோதனை ஆய்வுகூடமொன்றும் இயங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here