பாரம்பரிய விளையாட்டுப் போட்டியில் மர்கஸ் அந்நூர் அரபுக் கல்லூரி மாணவர்கள் சாதனை

0
546

(ஏ.எஸ்.றியாஸ் சஹ்வி)

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் அரச, தனியார் பாடசாலை மாணவர்களுக்கான பாரம்பரிய விளையாட்டு விழா நேற்று (29) ம் திகதி தியாவட்டுவான் அறபா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் வார், சாக்கோட்டம், கபடி, கயிறிழுத்தல், மை முட்டி அடித்தல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.

நடைபெற்ற 5 போட்டிகளிலும் மூன்று போட்டிகளில் முதல் நிலையையும் ஒரு போட்டியில் இரண்டாம் நிலையையும் மற்றுமொரு போட்டியில் மூன்றாமிடத்தையும் நாவலடி மர்கஸ் அந்நூர் மாணவர்கள் பெற்றனர். அல்ஹம்து லில்லாஹ்.

அத்தோடு ஏனைய இரண்டு போட்டிகளிலும் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரி மற்றும் அறபா வித்தியாலய மாணவர்கள் தலா ஒவ்வொரு போட்டியில் முதல் நிலை வெற்றி பெற்றனர்.

குறித்த பராம்பரிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிக்காட்டிய மர்கஸ் அந்நூர் மாணவர்களுக்கு கல்லூரியின் அதிபர், ஆசிரியர்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு மாணவர்களை பயிற்றுவித்த சிங்களப் பாட ஆசிரியர் மன்சூர் அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here