மாவட்ட செயலாளர் ஹனீபாவை சம்மாந்துறையின் முத்தாகவும், எங்களுடைய சொத்தாகவும் பார்க்கின்றோம் – உதுமான் கண்டு நாபீர்

0
287

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

06.07.2018 வெள்ளிக்கிழமை வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக வவுனியா மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்ட சகோதரர் ஐ.எம்.ஹனீபா சம்மாந்துறையின் ஓர் முத்தாகவும் அதே நேரத்தில் முழு முஸ்லிம் சமூகத்திற்கும் கிடைத்துள்ள சொத்தாகவும் பார்ப்பதாக நாபீர் பெளண்டேசனின் இஸ்தாபக தலைவரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் தனது வாழ்த்து செய்தியில் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் குறித்த வாழ்த்து செய்தியில் நாபீர் தெரிவித்துள்ளதாவது…..ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த ஹனீபா அம்பாறை மாவட்டத்திற்கு கிடைத்த ஓர் ஆளுமைமிக்க மனிதராக இருக்கும் அதே நேரத்தில் முழு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்களுக்கு கிடைத்துள்ள ஓர் வரப்பிரசாரமாகவே நான் அவரை பார்க்கின்றேன்.

அத்தோடு மறுபக்கத்தில் இந்த விடயத்தினை பார்க்க போனால் அண்மையில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆற்றிய உரையின் பயனாக இவ்வாறு இம்மாற்றம் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் இரண்டாவாது அரசாங்க அதிபாராக வருவாதற்கு பெரும் ஒத்துளைப்பு வழங்கிய விடயமாக பார்க்கப்படுகின்றது. ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கு எதிரான சதிவலைகளில் ஈடுபடுபவர்கள் தாங்கள்தான் இவ்வாறான மாற்றத்துக்கு காரணம் என முக நூல்களில் தப்பட்டம் அடிப்பது வேடிக்கையான விடயமாக உள்ளது.

இந்த வரலாற்று ரீதியான மாற்றமானது உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் ரீதியாகவும், மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள நிலையான நம்பிக்கையின் அடிப்படையிலும் நிறை குடம் தழும்பாது என்பதனை மீண்டும் ஒரு முறை முழு சமூகத்திற்கு நிரூபித்து காட்டியுள்ளது.

இவ்வாறாக சம்மாந்துறை மண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள கெளரவமானது வரலாற்றில் பதியப்பட்டுள்ள விடயமாக உள்ள அதே நேரத்தில் இவ் கெளரவத்தினை சம்மாந்துறை மண்ணுக்கு அளித்துள்ள கெளரவ ஜனாத்திபதி, பிரதம மந்திரி மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலையான அமைச்சர் ஹக்கீம், முக்கியமாக பாராளுமன்றத்தில் முஸ்லிம்களினுடைய குறித்த விடயம் சம்பந்தமாக உரையாற்றிய அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் நாபீர் பெளண்டேசன் தனது நன்றிகளை சம்மாந்துறை மண்சார்பாக தெரிவித்துகொள்வதாகவும் குறித்த வாழ்த்து செய்தியில் தெரிவிக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here