மட்டக்களப்பு பிரதான வீதி வந்தாருமூலையில் வேன் விபத்து ஏறாவூரைச் சேர்ந்த ரம்ஸி ஹாபிஸின் ஒன்பது வயது மகன் வபாத்

0
605

மட்டக்களப்பு பிரதான வீதி வந்தாருமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு முன்பாக இன்று (8) அதிகாலை இடம்பெற்ற பாரிய வேன் விபத்தில் ஏறாவூரை சேர்ந்த ரம்ஸி ஹாபிஸ் (ஆசிரியர்) அவர்களின் ஒன்பது வயது மகன் வபாத்தாகியுள்ளார் இன்னாலில்லாஹி வயின்னா இலைகி ராஜுவூன்.

இவ் விபத்து பற்றி தெரியவருவதாவது,

இன்று அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு – ஏறாவூரை நோக்கி வந்து கொண்டிருந்த குறித்த வேன் வந்தாருமூலை பல்கலைகழகத்திற்கு அருகிலுள்ள மின் கம்பத்துடன் மோதியதில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இவ் வேனில் பயனித்த பலர் காயப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here