மீராவோடை அல் ஹிதாயா அஹதிய்யா பாடசாலையின் அங்குரார்பண வைபவம்.

0
306

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி – மீராவோடையில் இயங்கிவரும் அல் ஹிதாயா அஹதிய்யா பாடசாலையின் அங்குரார்பண வைபவம் நேற்று (8) ம் திகதி மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

அஹதிய்யா பாடசாலையின் தலைவர் ரீ.எல்.அமானுல்லா (ஷர்கி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாகளாக கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, மீராவோடை அல் ஹிதாயா வித்தியாலய அதிபர் ஏ.எல்.அபுல் ஹசன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய நிகழ்வுகளோடு நடைபெற்ற இந்நிகழ்வில் அஹதிய்யா பாடசாலை பற்றிய அறிமுகவுரையினை அதன் அதிபர் எம்.சீ. அயூப்கான் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here