காணாமல் போன அதிபரும் மாணவனும் சடலமாக மீட்பு

0
376

அம்பாறை, தமண, எக்கல் ஓயாவில் படகு கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நால்வரில் இருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.

பதுள்ளை, கந்தன சிறிசீவலி வித்தியாலயத்தின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் குழு ஒன்று தமண பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டிருந்தது.

பாடசாலையின் அதிபர் மற்றும் 13 வயதுடைய மாணவன் ஒருவனுடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காணாமல் போன ஏனையவர்களை தேடும் பணியில் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here