பிரதி அமைச்சர் ஹரீஸினால் கணனி தொகுதி மற்றும் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைப்பு.

0
331

(அகமட் எஸ். முகைடீன்)

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளிற்கமைவாக அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் ஓ.என்.யூ.ஆர் திட்டத்தில் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்திற்கு கணனி தொகுதி மற்றும் அலுவலக தளபாடங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (9) திங்கட்கிழமை காலை பாடசாலை அதிபர் ஏ.எச். அலிஅக்பர் தலைமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை, அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், கல்முனை பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது கணனி தொகுதி மற்றும் அலுவலக தளபாடங்கள் பிரதி அமைச்சர் ஹரீசினால் வழங்கிவைக்கப்பட்டதோடு கணனி கூடமும் திறந்துவைக்கப்பட்டது.

மேலும் ஒரே நேரத்தில் குறித்த ஒரு வகுப்பு மாணவர்கள் கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக பிரதி அமைச்சர் ஹரீஸினால் இக்கணனி கூடம் மேலும் விஸ்தரிப்புச் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here