சிறுவர்களின் உயிர் காக்க தம் உயிர் நீத்த இரு முஸ்லிம் இளைஞர்கள் அமெரிக்காவில் சம்பவம்

0
339
(M.I. MUHAMMADH SAFSHATH
UNIVERSITY OF MORATUWA)

 

ஜுன் 29, 2018 வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் சிக்கோபி நீரோட்டத்தில் நீரில் மூழ்கித் தவித்த இரு சிறுவர்களை காப்பாற்றி அதிக நீரோட்டத்தால் தங்கள் உயிரையே தியாகம் செய்தனர் இரு முஸ்லிம் இளைஞர்கள்.

ஸவூதி அரேபியாவைச் சேர்ந்த தீப் அல்யாமி (27) மற்றும் ஜாஸர் அல் ராகா (25) ஆகிய இவர்கள் இருவரும் தங்கள் பொறியியல் கற்கைக்காக அமெரிக்க நியூ இங்கிலாந்து பிரதேசத்தில் வசித்து வந்தவர்களாவர். தீப் ஹாட்போர்ட் பல்கலைத்திலும் ஜாஸர் வெஸ்டர்ன் நியூ இங்கிலாந்து பல்கலைகழகத்தில் கல்வி பயின்று வந்தனர்.

குறித்த தினத்தில் சிக்கோபி நதி நீரோட்டத்தில் தன் இரு பிள்ளைகளை தவிக்க விட்டு பதறிய தாயை அவதானித்த இவர்கள் அவர்களை காப்பாற்ற நதியில் குதித்துள்ளனர். இரு பிள்ளைகளையும் காப்பாற்ற முடிந்த அவர்களால் மிகுந்த வேகம் கண்ட நீரோட்டத்தில் இருந்து மீள முடியாது மூழ்கி உயிர் நீத்தனர். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்)

வெள்ளிக்கிழமை ஒன்றும் திங்கட்கிழமை ஒன்றுமாக அவர்களது சடலங்கள் மீட்கப்பட்டன. அமெரிக்க அரசு உயிர் காக்க தங்களது உயிரையே அர்ப்பணித்த சர்வதேச மாணவர்களான அவர்களது தியாகத்தை பாராட்டி கதாநாயர்களாக சித்தரித்ததோடு, அவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுக்கு இரங்கல் தெரிவித்திருந்தது. அமெரிக்காவில் கல்வி பயிலும் 52, 000 ஸவூதி அரேபியா மாணவர்களில் இருவரான இவர்களது ஒரு சர்வதேச புரிதலையே ஏற்படுத்தி உள்ளதாகவும் பாராட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீரில் மூழ்கி உயிர்நீத்தவர் ஸஹீத் என முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (ஸஹீஹ் முஸ்லிம்) மேலும் வெள்ளிக்கிழமைகளில் மண்ணறை சோதனைகளில் இருந்து பாதுகாக்கப்பட்ட முஸ்லிம்களே மரணம் அடைவர் எனவும் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள். (திர்மிதீ)
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களை புரிந்து கொள்வானாக!

முஸ்லிம்கள் என்றாலே தீவிரவாதிகள் போல் காட்ட முயலும் அமெரிக்க ஊடகங்களுக்கு இவர்களது உயிர்த்தியாகம் ஒரு போதனையாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here