மாமரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவியின் கை உடைவு. #ஓட்டமாவடி

0
300

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை மத்தி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட நாவலடி பிரதேசத்தில் மாமரக்கிளை முறிந்து விழுந்ததில் மாணவியின் கையில் உடைவு ஏற்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இவ் விடயம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த மாணவி சம்பவம் நடந்த அன்று தூங்கிக் கொண்டிருக்கும் போது பலத்த காற்று வீசியதனால் மாமரக்கிளை முறிந்து விழுந்துள்ளது இதனால் மாணவியின் கையில் உடைவு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்துள்ள பாறூக் சப்ரினா எனும் மாணவி நாவலடி அல் மதீனா வித்தியாலயத்தில் தரம் நான்கில் கல்வி கற்பவராவார் மாணவி தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here