பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை ஆயிஷா வித்தியாலய மாணவிக்கு நிதியுதவி.

0
236

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவி சித்தீக் சியாமா சுஹா அண்மையில் நடைபெற்ற ஆங்கில மொழிமூல தேசிய கணித வினாடி வினாப் போட்டியில் பங்குபற்றி தேசிய ரீதியில் சாதனை படைத்து சிங்கப்பூரில் நடைபெறவுள்ள போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

சர்வதேச ரீதியில் நடைபெறும் குறித்த போட்டியில் பங்குபற்ற இம்மாதம் 26ம் திகதி சிங்கப்பூர் நாட்டுக்கு பயணமாகவுள்ள குறித்த மாணவியின் செலவீனங்களுக்காக பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் (11) ம் திகதி குறித்த மாணவியிடம் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட பணத்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் அவர்களின் தலைமையில் வழங்கப்பட்ட இந் நிதியுதவி வழங்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர் மற்றும் உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ. அஹ்சாப், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஏ.ஆர் முகைதீன் பாவா ஆசிரியர், உட்பட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here