ஹஜ் வழிகாட்டல் விவகாரம் கடந்த காலங்களை விட மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

0
253

(இக்பால் அலி)

ஹஜ் குழுவினரின் நடவடிக்கை ஹஜ் யாத்திரையாளர்களுக்கு திருப்தியளித்துள்ளது. இதில் ஹஜ் குழுவினர் முகவர்களுடைய ஆதிக்கத்துக்கு வலைந்து கொடுக்காமல் சீரான செய் நேர்த்தியுடன் செயற்பட்டு வருகின்றனர். ஒரு சில முகவர்கள் தங்களுடைய சுய இலாபத்திற்காக இது பற்றி விமர்சனம் செய்து வருகின்றனர். உண்மையிலேயே அமைச்சர் ஹலீம் அவர்கள் கடந்த காலங்கைள விட சிறந்த முறையில் ஹஜ் விவகாரப் பணிகளுக்கு ஆலோசனை வழங்கி சிறந்த முறையில் செயற்பட்டு வருகின்றார். அதற்கு எமது முஸ்லிம் சமூகம் நன்றியுணர்வுடன் பாராட்டுத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய மாகாண சபை உறுப்பினர் எம். டி. முத்தலிப் தெரிவித்தார்.

இது தொடர்பாக மாகாண சபை உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில்

முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலிமின் ஆலோசனையின் பிரகாரம் முன்னெடுக்க்கப்படும் ஹஜ் வழிகாட்டல் விவகாரம் கடந்த காலங்களை விட மிகவும் சிறந்த முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காலத்தில் முகவர்களே ஹஜ் யாத்திரையாளர்களை தெரிவு செய்தனர். ஆனால் புதிய ஒழுங்கின்படி ஹஜ் யாத்திரையாளர்களே சிறந்த முகவர் யார் என்று தெரிவு செய்து பயணத்தை மேற்கொள்ளுவதற்கான வசதி வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல தற்போதைய டொலர் விலையேற்றத்தின் சூழலில் முகவர்கள் ஹஜ் யாத்திரையாளர்களைச் தெரிவு செய்து கடந்த காலங்களைப் போன்று புனித மக்காவுக்கு அழைத்துச் செல்வார்களானால் ஒரு ஹாஜி 10 இலட்சத்துக்கு மேல் வரை செலுத்த வேண்டி நிர்ப்பந்தம் ஏற்பட்டு இருக்கும். சாதாரண மக்களால் புனித ஹஜ் யாத்திரை செல்ல முடியாது. இந்தப் புதிய ஒழுங்கு முறையின் மூலம் சாதாரண மக்களும் புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ளலாம். அமைச்சர் ஹலீமினால் நியமிக்கப்பட்ட ஹஜ் குழுவினர் சிறந்த முறையில் திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. இதற்காக நாங்கள் பெருமைப்பட வேண்டும்.

சகல வசதிகளுடன் சாதாரண மக்களும் மிகவும் குறைந்த விலையில் கட்டணம் செலுத்தி ஹஜ் யாத்திரை செல்வதற்கான சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளன. கடந்த அரசாங்கத்தில் 7 இலட்சம் என்று இருந்த கட்டணத்தொகை அமைச்சர் ஹலீமின் ஆலோசனையின் பிரகாரம் நான்கு இலட்சத்து 50 ஆயிரம் 5 இலட்சம் என குறைத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஹஜ் யாத்திரையாளர்கள் அதிக பட்ச செலவுகள் இல்லாமல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் ஹஜ் யாத்திரையாளர்களை அழைத்துச் சென்று அங்கு கஷ்டமான நிலைக்கு உள்ளாக்கினர். அவர்களுக்கு எந்த நடவடிக்கையும் இதற்கு முன்னர் இருந்தவர்கள் எடுக்க வில்லை. இப்போது அப்படியெல்லாம் நடக்க முடியாது. ஹஜ் யாத்திரையாளர் ஒருவருக்கு எதாவது சரி பாதகம் ஏற்பட்டால் எந்தவொரு தயவு தாட்சண்யமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இது ஹஜ் யாத்திரையாளர்களுக்கு நன்மையே தவிர முகவர்களுக்கு அல்ல . ஒரு சில முகவர்களின் சுய நலத்திற்காகவே ஹஜ் விவகாரம் சம்மந்தமாக விமர்சனம் செய்கின்றர் என்று மாகாண சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here