வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் வணிக வார நிகழ்வு.

0
261

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திக்கமைய வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் வணிக வார நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் அவர்களின் தலைமையில் (12) பாடசாலை முன்றலில் நடைபெற்றது.

பாடசாலை மாணவர்கள் மத்தியில் வணிக அறிவினை விருத்தி செய்யும் வகையிலும், கள ரீதியாக வணிகமொன்று இடம்பெறும் விதம் பற்றியும் மாணவர்களுக்கு தெளிவூட்டுவதற்காக இவ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவ சமூகம் ஓர் நவீன சந்தை இடம்பெறும் விதம் அதன் நடைமுறை தொடர்பான விளக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்காக ஏற்பாடு செய்திருந்த இந் நிகழ்வில் வங்கிகளின் கிளைகள், பழவகைக் கடைகள், துணிவகைக் கடைகள், புத்தகக் கடைகள் போன்றன அமையப்பெற்றிருந்தன அத்தோடு மலிவான விலையில் பல்வேறுபட்ட பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here