வாழைச்சேனை பிறைந்துறைச்சேனையில் ஹேரோயின் மற்றும் கஞ்சாவுடன் இருவர் கைது

0
203

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் வெவ்வேறு பகுதியில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவரை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினர்களான பொலிஸ் பரிசோதகர் பன்டார, பொலிஸ் சாஜன்களான எம்.என்.மென்டிஸ், இந்திக்க பெரேரே, எஸ்.தினுச, எஸ்.நிமால் உள்ளிட்டோர் இரண்டரை இலட்சம் ரூபாய் பெறுமதியான கஞ்சா, ஹேரோயின் மற்றும் சந்தேக நபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான 2700 மில்லி கிராம் ஹேரோயின் மற்றும் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா என்பன வியாபார நடவடிக்கைக்கு கொண்டு சென்ற போது வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பிறைந்துறைச்சேனை பகுதியில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் அதிக போதைப் பாவனை இடம்பெற்று வருவதால் அதனை தடுக்கும் வகையில் விசேட பொலிஸ் குழுவினர் இரவு பகலாக ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனைகள் அதிகரித்து காணப்படுவதை தடுக்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here