அமைச்சா் மனோவிடம் தமிழ்த் தாய்மாா்கள் கேட்பது ?

0
297

(அஷ்ரப். எ சமத்)

கொழும்பு மட்டக்குலியில் உள்ள பேக்சன் வீதியில் உள்ள கழிவு நீர் அகற்றும் நீரோடையை சுத்தப்படுத்தும் திட்டத்திற்கு இன்று (12) சென்ற அமைச்சா் மனோவிடம் அப்பிரதேசத்தில் வாழும் தாய் மாா்கள் ஓடி வந்து அமைச்சா் மனோவைச் சந்தித்துச் சொல்லும் கதை என்ன?

ஐயா எங்களது சிறிய பிள்ளைகளைக் காப்பாற்ற கொழும்பில் ஏதாச்சும் வழி செய்யுங்கள் ஐயா எனது மகளும் மருமகனும் 6 வருடமாக போதைப்பொருள் பாவனையில் சிக்கி சிறையில் இருக்கின்றாா்கள். அவா்களது பிள்ளைகளை 4 பேரையும் நான்தான் கவனிக்கிறேன். அவங்கள கொழும்பில இல்லாமால் வேற ஒர் ஊர்ல தங்க வைச்சிருக்கன். இங்க பிள்ளைகளப் படிப்பிச்சி வழக்கின்ற சூழ்நிலை இந்த பிரதேசத்தில் இல்ல, நாங்கள் வீடு உணவு அபிவிருத்திய உங்களிடம் கேட்கவில்லை நிம்மதியாக வாழ ஒரு வழி செய்யுங்க எனது பேரப் பிள்ளைகளை வேறு ஊர்ல உள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கின்றனாா்.

இந்தப் பகுதியில பிள்ளைகளை நிம்மதியாக வைச்சிருக்க முடியல்ல 12 ,14, 16 வயது பருவத்திலையே இந்தப் பகுதி சிறாா்கள் கஞ்சா, குடு, குடி. என போதைப்பொருளுக்கும் அடிமையாகிறாங்க, இவா்கள சிறுவயதிலே இப்படி பெரியவங்க கூட்டிக் கொண்டு சென்று பழக்கி விடுராங்க பின் விற்பனைக்கும் அதனை பாவிப்பதற்கும் பழக்கி இந்தப் பிள்ளைகளின் எதிா்காலத்தினை நாசமாக்கிறாங்க எல்லா இனமும் சாா்ந்தவா்களையுடைய பிள்ளைகளும் இங்க நாசமாகுது.

மட்டக்குழி, மட்டுமல்ல கொழும்பு மாநகர பிரதேசத்தில எங்கவும் போய் நிம்மதியாக வாழ்வதற்கு பயமாக இருக்கின்றது. போதை பொருள், கஞ்சா, சாரயம் பாவணைய இந்த நாட்டில இருந்து இல்லாமல் செய்வதற்கு ஜனாதிபதி, பிரதமா் ஊடாக ஒர் வழி செய்ங்க, சிறையில எத்தனையோ பேர் இருக்கிறாங்க அவங்களையும் மீட்டுத்தாங்க, என அந்த தாய் மாா் அமைச்சா் மனோவிடம் கண்னீா் மலக இக் சோகக் கதையைக் கூறுகின்றனர். மனோ பதிலளிக்கையில் இவ் விடயத்தினை ஜனாதிபதி பிரதமாிடம் பேசுகின்றேன். நீங்களும் கஞ்சா குடு விக்கிரவனைத்தானே வாக்களிச்சி மந்திரியாக்கிரிங்க எனச் சொன்னாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here