பிறைந்துறைச்சேனையில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருபெண்கள் உட்பட மூவர் கைது!

0
370

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

வாழைச்சேனை பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட மூன்று நபர்கள் புதன்கிழமை மாலை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தலைமையிலான குழுவினர்களான இந்திக்க பெரேரே, எஸ்.ராஜகுரு, எஸ்.ரசாத், எஸ்.பத்மலதா, நியாஸ்தீன், பெரரேரா உள்ளிட்டோர் போதைப் பொருட்கள் மற்றும் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.

பிறைந்துறைச்சேனையை சேர்ந்த 21 வயதுடைய ஆணிடம் இருந்து பதினையாயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு கிராம் கஞ்சா மற்றும் நான்கு போதை மாத்திரைகள், பிறைந்துறைச்சேனையை சேர்ந்த 19 வயதுடைய பெண்ணிடம் இருந்து இருபதாயிரம் ரூபாய் பெறுமதியான மூன்று கிராம் கஞ்சா மற்றும் நான்கு போதை மாத்திரைகள், பிறைந்துறைச்சேனையை சேர்ந்த 40 வயதுடைய பெண்ணிடம் இருந்து இருபத்தையாயிரம் ரூபாய் பெறுமதியான ஐந்து கிராம் கஞ்சா மற்றும் நான்கு போதை மாத்திரைகள் என்பன வியாபார நடவடிக்கைக்கு கொண்டு சென்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பிறைந்துறைச்சேனை பகுதியில் அதிக போதைப் பாவனை இடம்பெற்று வருவதால் அப்பகுதி மக்கள் வழங்கிய இரகசிய தகவலையடுத்து; விசேட பொலிஸ் குழுவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here