மீராவோடையில் ஆற்று அணைக்கட்டு நிர்மாணப் பணிக்காக அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

0
261

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை மேற்கு ஆற்றங்கரைப் பகுதியில் ஆற்று அணைக்கட்டு நிர்மாணப் பணிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று (13) ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது.

மீன்பிடி நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் அமீர் அலி அவர்களின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள இவ் ஆற்று அணைக்கட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி கலந்து கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மீராவோடை மேற்கு வட்டாரத்துக்கான அபிவிருத்திக் குழுத் தலைவர் ஐ.எம்.றிஸ்வின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏனைய அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி மற்றும் முன்னாள் தவிசாளரும் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவருமாகிய கே.பீ.எஸ்.ஹமீட், ஐக்கிய தேசியக் கட்சியின் ஓட்டமாவடி அபிவிருத்திக் குழுத்தலைவர் எல்.ரீ.எம்.புர்கான், உலமாக்கள், ஆசிரியர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பிரதேச மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here