குழந்தைக்கு மதுபானம் வழங்கிய காணொளி தொடர்பில் விசாரணை ஆரம்பம்

0
234

சிறு குழந்தைக்கு மதுபானம் அருந்தக் கொடுத்த காணொளியொன்று, சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர் தொடர்பான விசாரணைகளை, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.

குழந்தையின் தந்தையே, இவ்வாறு மதுபானம் வழங்குவதாக, காணொளி மூலம் ஊகிக்கக் கூடியதாக இருப்பதுடன், இதனை, பிரிதொரு நபர் காணொளியாகப் பதிவுசெய்து, முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறியக் கிடைத்ததையடுத்து, தற்போது விசாரணைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை, குழந்தைப் பராமரிப்பு மற்றும் மேம்பாடு தொடர்பான தேசிய வாரம், 14 – 20ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here