முயற்சி திருவினையாக்குமா?

0
394

(எம்.எம்.ஏ.ஸமட்)

சமூக உணர்வு கொண்ட சிலரினால் காலத்திற்குக் காலம் சமூக அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாகின்ற அமைப்புக்களை வழி நடத்துவதில் சவால்களையும், சிக்கல்களையும் எதிர்கொண்டாலும், அவற்றிற்கு முகம்கொடுத்து, செயற்பாடுகளை தீவிரமாக முன்னெடுப்பதிலுமம், சமூகத்தின் சில பொதுத் தேவைகளை நிறைவேற்றி வைப்பதிலும் அவ்வமைப்புக்கள் அக்கறைகொள்வதையும்;; காண முடிகிறது.

ஆனால்; சில அமைப்புக்களின் ஆரம்பம் சமூக நோக்காக இருந்தாலும், ஈற்றில் சுய விளம்பரமும், சுயநலமும் ஆதிக்கம் செலுத்த முற்படுகின்றன. ஒரு சிலரின் தேவைகளை நிறைவேற்றி வைக்கும் அமைப்புக்களாகச் செயற்பட எத்தனிக்கின்றன. அவற்றின் இலக்குகள் திசை மாற்றப்படுகின்றன. இத்திசைமாற்றம் பிளவுகளை உருவாக்கி இலக்குகளை அடைவதிலிருந்தும் தூரமாக்குகின்றது. பிளவுகளையும் எதிர்கொண்டு அத்தனையும் பூச்சியமாகிறது. இவ்வாறான அமைப்புகளின் நிலையில்தான் முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வரலாற்றுப் பின்னணியியும் காணப்படுகின்றன.

வரலாற்றில் முஸ்லிம் அரசியல்

இலங்கையின்; அரசியல் வரலாற்றை சுதந்திரத்திற்கு முற்பட்ட காலம், பிற்பட்ட காலம் என வகுத்துக்கொண்டால், இவ்விரு வரலாற்றுக் காலங்களிலும் முஸ்லிம்கள் நெருக்கடிகளுக்கும் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்திருக்கிறார்கள். பல்லின சமூகக் கட்டமைப்பைக் கொண்ட இந்நாட்டில் ஒரு இனம் பிரிதொரு இனத்தின் சில குழுக்களினால் ஏதோ ஒரு வகையில் காலத்திற்குக் காலம் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருக்கிறது. வன்முறைகள் ஏவிவிடப்பட்டிருக்கின்றன. அதனால் உயிர், உடமைகள், வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு உரிமைகளும் கேள்விக்கப்படுத்தப்பட்டிருக்கிறது.

1814, 1915, 1983, 1990, 2014, 2015ஆம் ஆண்டு;களில் ஏற்பட்ட இனமோதல்கள மற்றும் இவ்வருடம் அம்பாறை, கண்டி நகரங்களில் ஏற்படுத்தப்பட்ட அட்டூழியங்களை இவற்றிற்கு உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இச்சந்தர்ப்பங்;களில் முஸ்லிம் சமூகத்திலிருந்த ஒரு சிலர் ஆட்சியாளர்களின் செல்லப் பிள்ளைகளாகச் செயற்பட்டு இனத்துவத்தை அடமானம் வைத்துமிருக்கின்றார்கள்.

சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் உருவான சூழ்நிலைத்தாங்கங்ளின் விளைவுகளால் முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலிருந்து அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உதயமாகியிருக்கின்றன. இவ்வகையில், 1944ஆம் ஆண்டு அகில இலங்கை மலாய அரசியல் யூனியன்; உருவாக்கப்பட்டது. 1960ஆம் ஆண்டு அகில இலங்கை இஸ்லாமிய முற்போக்கு முன்னணி ஆரம்பிக்கப்பட்டது. முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி 1964ல் தோற்றம் பெற்றது. அவ்வாறு அஸீஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ, ஐக்கிய முஸ்லிம் மக்கள் முன்னணி போன்ற கட்சிகளும் உருவாகின.

ஆனால், இக்கட்சிகளினால் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. கால ஓட்டத்தல் இக்கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழந்தன. 1948ஆம் ஆண்டு முதல் 1982ஆம் ஆண்டு காலம் வரை இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் பலமிக்கதொரு அரசியல் கட்சி உருவாக்கப்படவில்லை. முஸ்லிம்களின் வரலாற்றுக் காயங்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்க வேண்டுமாயின் தன்மானத்தை இழக்காத, உறுதியான கொள்கைப் பிடிப்போடு கூடிய, தனித்துவமிக்க, அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்படுவது அவசியம் என்ற சிந்தனை மறைந்த எம்.எச்.எம். அஷ்ரபிடம் உதித்தது. இந்த உணர்வின் வழியில்; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சி 1982 ஆம் ஆண்டு கிழக்கில் ஆரம்பிக்கப்பட்டு, 1986இல் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டது.

அதுவரை, முஸ்லிம் சமூகத்தின் மத்தியிலும்; மாற்றுச் சமூகத்திலும் தங்களை சமூகத்தின் அரசியல் தலைவர்களாக அடையாளப்படுத்திக் கொண்டு செயற்பட்டவர்களுக்கு அஷ்ரபின் அரசியல் பிரவேசமும் அவரது கட்சியின் வரவும் பெரும் சவாலாக அமைந்தமை வரலாறாகும்.

ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் இன்னும் ஓரிரு தேசியக் கட்சிகளினதும் உறுப்பினர்களாக அங்கத்தும் பெற்று, மக்கள் அரசியல் மயப்படுவதை தடுத்துக்கொண்டு, தங்களின்பால் மக்களை இணைத்துக்கொண்டவர்களாக ஒவ்வொரு தேர்தலிலும் போட்டியிட்டு, சமூகம் தோல்வியுற்று, தாங்கள் மட்டும் வெற்றிபெற்ற இவர்கள் அஷ்ரபை பல்வேறு வழிகளிலும் நெருக்கடிகளுக்குள் தள்ளினர்.

அஷ்ரப்பின் ஆரோக்கியமிக்க அரசியல் பயணம் தென்னிலங்கையில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியது. ஆளுமையும் அரசியல் எதிர்கால வியூக சிந்தனையும் நிறைந்த அவரின்; அரசியல் பயணத்தின் வெற்றி ஒளி இலங்கை முழுதும் பிரகாசிக்கத் தொடங்கியது. அவரினால்; முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கூக்குரல்களை பாராளுமன்றத்திற்குள்ளும் அதற்கு வெளியிலும் முஸ்லிம் அரசியல் நபர்களைக்கொண்டே முன்னெடுக்கச் செய்யப்பட்டன. அதன் முடிவு 2000ஆம் ஆண்டில் ஹெலிக்கெப்டர்; விபத்தினூடாக முஸ்லிம் சமூகத்திற்கான அவரது குரல் மௌனமாக்கப்பட்டது. அதன் பிரதிபளிப்பை வடக்கு கிழக்கு முஸ்லிம் சமூகம் இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறது என்பதை இப்பிராந்தியத்தில் நிலவும் ஆளுமையுள்ள அரசியல் தலைமைத்துவத்துக்கான வெற்றிடம் நன்கு புடம்போட்டுக் காட்டுகிறது. இந்நிலையில் தற்போதுள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள்ன் செயற்பாடுகள் மற்றும் கட்சிகளுக்கிடையிலான பிரிவினை குறித்தான விமர்சனங்கள் தொடர்ச்சியாக முஸ்லிம் சமூகத்திலிருந்து வந்துகொண்டிருக்கிறது.

விமர்சனங்களும் மதிப்பளித்தலும்

மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகாரத்துக்கு வந்தவர்களினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றபோது அல்லது அப்பிரச்சினைகள் தொடர்பில் மௌனம் காக்கின்றபோது அவற்றைச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் எதிர்பார்க்கின்ற விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்.
அத்தகைய விமர்சனங்களை அவமானப்படுத்தாது அவற்றுக்கு மதிப்பளிப்பது சம்பந்தபபட்டவர்களின் தார்மீகப் கடப்பாடாகும். அத்தோடு அவ்விமர்சனங்கள் தொடர்பில் சுயவிமர்சனங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அத்தகையவர்களின்; சமூகப் பொறுமாகும்.
தொலைக்காட்சி, வானொலி நிகழ்ச்சிகளினூடாகவும். பத்திரிகைள், சஞ்சிகைகள மற்றும் இணையத்தள செய்திச் சேவைகள், வட்செப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களினூடாவும் முஸ்லிம் சமூக அபிவிருத்தி, சமூக நலன்கள், சமூக எழுச்சி மற்றும் சமூக மாற்றங்கள் தொடர்பில் ஆரோக்கியமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

அவ்வாறு முன்வைக்கப்படுகின்ற அவ்விமர்சனங்கள் தமது கட்சியை அல்லது கட்சித் தலைமையின் செயற்பாடுகளை நெருக்கடிக்குள் தள்ளுவதாகக் கருதும் அரசியல் தலைமைகளினால் அவ்விமர்சனங்களை முன்வைக்கும் நபர்களின் கருத்துச் சுதந்திரங்களைப் பறிக்க முயற்சிக்கப்படுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் கடந்த காலங்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
தங்களை அல்லது தங்களது கட்சியினை ஊடகங்கள் வாயிலாக விமர்;சிக்றார்கள் என்பதற்காக ஒருவரின் கருத்துச் சுதந்திரத்தைப் முழுங்கடிக்கச் செய்வதற்கான செயற்பாடுகள் அவரினால் அச்சமூகம் அடையும் அல்லது அடையவுள்ள பயன்களைத் தடுப்பதாகவே அமையும்.

இச்சந்தர்ப்பத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கடந்த பெப்ரவரி மாதத்தில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் கட்சிகள் சார்பாக போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குறுதிகளில் இது வரை எத்தனை வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருகின்றன.
இவர்களைத் வெற்றி பெறச் செய்வதன்; ஊடாக தங்களது அபிலாஷைகள் நிறைவு செய்யப்படும் என்று எதிர்பார்த்த மக்கள் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற்றப்படாத சந்தர்ப்பத்தில் இவர்கள் குறித்தான விமர்சனங்களை முன்வைப்பதைத் தவிர்க்க முடியாது.

முஸ்லிம் சமூகத்தின் அரசியல் தலைமைகளின் ஒரு முகச் சரியையும் மறுமுகப் பிழையையும் முஸ்லிம் சமூகம் கண்டுகொண்டிருக்கிறது. சமூகத்திற்குள் அல்லது சமூகத்திற்கு வெளியில் ஒரு பிரச்சினை எழுகின்றபோது அந்தப் பிரச்சினையானது எந்தப் பிராந்தியத்துக்குரியது? எந்த அரசியல் கட்சி தலைவர் சார்ந்ததது? இப்பிரச்சினைக்குள் நாம் தலையிட்டால் நமது அரசியல் இருப்பின் நிலையென்ன? என்ற கேள்விச் சிந்தனையோட்டங்கள் முஸ்லிம் அரசியலில் மலிந்து கிடைப்பதையும்; காண முடிகிறது. இந்த அரசியல் தொடர்பயணம் மாற்றம் பெற வேண்டுமாயின் அம்மாற்றம் தொடர்பில் சிந்திக்கப்படுவதும் அவசியமாகும்.

மாற்றத்தின் தேவை

புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் அமைப்பில் முஸ்லிம் சமூகத்திற்குள்ள நன்மை தீமைகள், வடக்கு கிழக்கு வாழ் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வடக்கு கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற இனவாத நெருக்குதல்கள் உட்பட முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற நீண்ட கால: சமகால மற்றும் அடிப்படை சமூக பொருளாதாரம் உள்ளிட்ட அத்தனை பிரச்சினைகளும் பிராந்திய ரீதியான, கட்சி ரீதியான, இஸ்லாமிய இயக்கக் கொள்கைகள் ரீதியான பிரச்சினைகளாக நோக்கப்படாது ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் எதிர்நோக்கும் பிரச்சினையாக முஸ்லிம்கள் மத்தியில் நோக்கப்படுவது அவசியமாகும்.

இந்த அவசியத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் அரசியல், இஸ்லாமிய இயக்கக் கொள்கைகள், பிராந்தியம் என்பவற்றைக் கடந்து ஒரே இறைவன், ஒரே நபி, ஓரே குர்ஆன், ஒரே கிப்லா என்ற நம்பிக்கையின் அடிப்படையில அனைத்துத் தரப்புக்களும் இதயசுத்தியோடு, செயற்படுவதற்கு ஒன்றிணைக்கப்படுவது முக்கியமாகும். இந்த முக்கிய தேவையை நிறைவேற்ற, அவற்றிற்கு அழுத்தம் கொடுக்க எவற்றிற்கு; சோரம்போகாத, சமூக நலனை அடைவதை மாத்திரம் இலக்காக்கொண்ட நபர்களைக் உள்ளடக்கிய சிவில் அமைப்புக்கள் உருவாகுவது கட்டாயமாகும்.

அந்தவகையில், சமூகத்தில், சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். அந்த மாற்றத்திற்காக கருத்து ஒருமைப்பாடுயுடையவர்கள் ஒன்றுபடுவதும் அவர்களை ஒன்றிணைப்பதும் அவசியமாகும். அதற்காக தங்களை மாற்றிக்கொண்டு அல்லது மாறியாவது பலமான சிவில் அமைப்பை உருhவக்க சமூக சிந்தனை கொண்டோர் முன்வர வேண்டுமென முன்னைய பல கட்டுரைகள் முலம் அழைப்பு விடுக்கப்பட்டமையை இங்கு நினைவு படுத்துவது அவசியமாகவுள்ளது.

பூணைக்கு மணிகட்டும் முயற்சிகள் காலத்திற்குக் காலம் முன்னெடுக்கப்பட்டு மணி கட்டப்பட்டு அவ்வாறு கட்டப்பட்டு உருவாக்கப்பட்ட அமைப்புக்களினூடாக ஒரு சில பணிகள் முன்னெடுக்கப்பட்ட, முன்னெடுக்கின்ற போதிலும் சிவில் அமைப்புக்களின்; தலைவர்களாகவும் பதவி நிலை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்படுகின்றவர்கள் காலப்போக்கில் தமது இலக்குகளையும், நோக்கங்களையும் மறந்து பதவிகளுக்கும், சலுகைகளுக்கும் சோரம்போய் கட்டிய மணியைக் கழற்றி விடுகின்ற நிலையே காணப்பட்டிருக்கிறது.

இருப்பினும், கருத்து ஒருமைப்பாடுகொண்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்புக்கு அவ்வப்போது உயிர்வூட்டப்பட்டிருக்கிறது. இருந்தாலும், சலுகைகளுக்கு சோரபோகின்றவர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புக்களிலிருந்து காலத்தின் அவசரத்திற்கேற்ப மக்களுக்கான பணியினை முன்னெடுக்க முடியாது என்று சிந்தித்த சிலர் புதிய முயற்சியில் தற்போது இறங்கியிருக்கிறார்கள். மக்களின் நலன்களை நிறைவேற்ற அரசியல் அதிகாரம் என்பது இன்றியமையாதது என்ற கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் கிழக்கிலுள்ள முஸ்லிம் தொழில்வாண்மையாளர்கள் அணியொன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்கும் முய்ற்சியிலும் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை அறிய முடிகிறது.

தேர்தலில் குதிக்கவுள்ள முஸ்லிம் தொழில்வாண்மையாளர்கள்

கிழக்கின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலைப் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் தொழில்வாண்மையாளர்கள் பலரும் அவர்களோடு கிழக்கில் செயற்படும்; சமூக சிவில் அமைப்புக்களிலுள்ள ஒரு சில பிரதிநிதிகளும் அடங்கலாக் ஒன்றிணைந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஆறு மாகாண சபைகளுக்கான தேர்தலில் கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக இந்த முஸ்லிம் தொழில்வாண்மையாளர்கள் அணியில் அங்கம் வகிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் தெரிவித்தார்.

புதிய கட்சியொன்றை உருவாக்கி இத்தேர்தலில் களமிறங்குவது சாத்தியமாகாது என்ற நிலையில் கிழக்கிலுள்ள தமது கொள்கைகளுக்கு இசைவான கட்சியொன்றுடன் இணைந்து கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் களமிறங்வுள்ளதாகவும், இது தொடர்பில் ஓரிரு கட்சிகளுடன் பேச்சுவார்;த்தை இடம்பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், தற்போது வரையப்பட்டு வருகின்ற இலங்கையின் மூன்றவாது புதிய அரசியல் அமைப்பு குறித்தும் அதன் மறுசீரமைப்pனால் முஸ்லிம் சமூகம் அடையப் போகும் நன்மை, தீமைகள் தொடர்பிலும்; மக்களை விழிப்பூட்டும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றபோதிலும் இவ்விடயங்கள் அனைத்து முஸ்லிம்கள் மத்தியிலும் சென்றடைவதற்கான பொறிமுறைகளினூடாக முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இந்நபர் தெரிவித்தார்..

இந்நிலையில், புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமா, மாகாண சபைத்தேர்தல்கள் புதிய முறையிலா அல்லது பழைய முறையிலா நடைபெறும் என்ற கேள்விகள் பலமாக தேசிய அரசியலில் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மாகாண சபைத் தேர்தல்களின் மூலம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்படுவதும். தனித்துவ இனம் என்ற ரீதியில் புதிய அரசியலமைப்பு முஸ்லிம்களின் உரிமை சார்ந்த விடயங்களில் பாதிப்பை ஏற்படுத்தி விடக்
கூடாது என்பது தொடர்பிலும் மக்கள் விழிப்படையச் செய்யப்படுவது அசியமாகும்.

இலங்கை வாழ் சமூகங்களில் முஸ்லிம்களும் தனித்துவ அடையாளங்களைக் கொண்ட சமூகம் என்ற வகையில் புதிய அரசியல் அமைப்பில் முஸ்லிம்கள் சார்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளும், முன்மொழிவுகளும் உள்ளடக்கப்படுவது அவசியம். முஸ்லிம்களின் வாழ்வியலுக்கான தனித்துவச் சட்டங்கள் நீக்கப்படுவதோ அல்லது முஸ்லிம்களின் சுயநிர்ணைய உரிமைகள் பறிபோகும் வடிவிலே இவ்வரசியல் வரைவு அமைந்துவிடக் கூடாது. இவை தொடர்பிலான முழுமையான அறிவை முஸ்லிம்களுக்கு பெற்றுக்கொடுக்கும் வகையில் முழுமையான விழிப்புணர்வு நடவடிக்கையை சமூகத்தின் மத்தியில் கொண்டு செல்வது முஸ்லிம் ஊடகவியலாளர்களினதும் சிவில் சமூகசெல்வது தார்மீகப் பொறுப்பாகும்.

முஸ்லிம் ஊடகவியலாளர்களின் பொறுப்பு

முஸ்லிம் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்பதற்காக முஸ்லிம் சமூகத்திலுள்ள குறிப்பாக கிழக்கிலுள்ள முஸ்லிம் தொழில்வாண்மையாளர்கள் மேற்கொண்டுள்ள புதிய முயற்சியானது சவால்மிக்கது என்பது வெளிப்படை. இந்நிலைமைகளுக்கு மத்தியில் முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முன்னிலைப்படுத்தி உருவாக்கப்பட்ட பிரதேச, மாவட்ட மற்றும் மாகாண மட்ட ரீதியிலான சிவில் அமைப்புக்கள் தங்களது சுயநலன்களை வெற்றிகொள்வதற்காக பதவிகளுக்கும்,. சலுகைகளுக்கும் சோரம்போவதில் அவர்கள் இன்னும் மாற்றமடையவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுவது காலத்தின் தேவையாகும். சமூகத்திலுள்ள ஊடகவியலாளர்கள் உட்பட ஒவ்வொரு துறைசார்ந்தோரும் வௌ;வேறு பெயர்களில் சிவில் அமைப்புக்களை உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால்  அவ்வமைப்புக்களினால் இதுவரை சமூகம் அடைந்த நன்மைகள் எவை என்பதே இன்றைய கேள்வியாகவுள்ளது.

சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளியில் கொண்டு வருவதில் முக்கிய பங்கு வகிப்பவர்கள்தான் ஊடகவியலாள்கள். அரசாங்க தகவல் திணைக்களத்தினால் பதிவு செய்யப்பட்ட ஏறக்குறைய 4000 ஊடகவியலாளர்கள் உள்ளனர். இவர்களில் கனிசமான தொகையினர் தமிழ்பேசும் ஊடகவியலாளர்களாகவும் உள்ளனர்;. அத்தோடு திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத பலரும் சுதந்திர ஊடகவியலாளர்களாகச் செயற்படுகின்றனர். இவர்களில் முஸ்லிம் ஊடக அமைப்புக்களில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிப்பிடுகின்றபோது பெரும்தொகை முஸ்லிம் ஊடகவியலாளர்கள் இத்துறையில் பணிபுரிகின்றனர். அதிகளவிலான ஊடகவியலாளர்கள்; கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருக்கின்றனர்

முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை வெளியில் கொண்டுவதற்காக அல்லது முஸ்லிம் சமூகம்சார் பிரச்சினைகளுக்கான தீர்வை இராஜதந்திர ரீதியாகப பெற்றுக்கொள்ளவதற்காக வேண்டியாவது முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்காக எத்தனை ஊடகவியலாளர்கள் தங்களது பேனாக்களைப் பயன்படுத்துகின்றனர். இப்பணியில் ஒரு சில ஊடகவியலாளர்கள் ஈடுபட்டாலும் பெரும்பாலானோரின் பணி வேறுவிதமாகவே அமையப்பெற்றிருப்பது கவலையளிக்கிறது.

பலவீனமடைந்துள்ள முஸ்லிம் அரசியலில் மக்களின் உணர்வுகளை மதித்து மக்களின் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளாத கட்சிகளும், தலைவர்களும் மக்களுக்குத் தேவையா? என முடிவெடுப்பது மக்கள்தான். மக்கள் அந்த முடிவுக்கு வரத் தேவையான விழிப்புணர்வை வழங்கவேண்டிய பொறுப்பைச் சுமந்தவர்கள் குறிப்பாக ஊடகவியலாளர்களாகத்தான் இருக்க முடியும். ஏனெனில், ஊடகவியலாளர்களின் பேனாமுனை சக்திமிக்கது. ஆனால், ஒரு சில ஊடகவியலாளர்கள் தங்களது சுய விளம்பரத்திற்காகவும் தங்கள் நலன்களை அதிகரித்துக்கொள்வதற்காகவும் இந்தப் பேனாவைப் பயன்படுத்துகின்றனர். சமூகத்தின் வெளிப்படுத்தப்படாத எத்தனையோ பிரச்சினைகள் காணப்படுகின்றபோது, அவற்றை மக்கள் மயப்படுத்தவும் தேசிய மயப்படுத்தவும் முயற்சிக்காது தங்களை ஊடகவியலாளர்கள் என்றும் எழுத்தாளர்கள் என்றும் பிரபல்யப்படுத்திக் கொண்டு தங்களது பெயர் தேசமெங்கும் பரப்பப்பட வேண்டும் என்பதற்காக புத்தகங்களையே அச்சிட்டு இலவசமாக வழங்கும் கவலைக்குரிய நிகழ்வுகளும் நடந்தேறுவதைக் குறிப்பிட்டாக வேண்டும்.

அவ்வாறனதொரு சுயவிளம்பரத் தேடலுக்கான சூழ்நிலை ஊடகவிலாளர் சமூகத்தில் காணப்படுகின்ற நிலையிலும், முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கடந்த காலங்களில் சில ஊடகவியலாள்கள் இறங்கியிருந்தனர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. இந்நிலையில்தான், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட தொழில்வாண்மையாளர்களைக் கொண்டதொரு அணி எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலைச் சந்திப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

போட்டி நிறைந்த கிழக்கு முஸ்லிம் அரசியல் களத்தில் குதிக்கவுள்ள இந்த முஸ்லிம் தொழில்வாண்மையாளர்களைக் கொண்ட அணி இறங்கி செயற்படுகின்றபோது இவர்களை கிழக்கு முஸ்லிம்கள் எந்தளவு ஏற்றுக்கொள்வார்கள்.? கிழக்கு முஸ்லிம் வாக்காளர்களை முதலீடாகக் கொண்டு சுகபோகங்களை அனுபவித்துக்கொண்டிருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சிகளினால் எத்தகைய நெருக்கடிகளை இந்த அணி சந்திக்கும்.? இச்சவால்களுக்கு எவ்வாறு இவ்வணி முகம்கொடுக்கும் என்ற கேள்விகளுக்கு மத்தியில் முஸ்லிம் தொழில்வாண்மையாளர்களைக் கொண்ட அணியினரின் முயற்சிகள் திருவினையாக்குமா என்பதை எதிர்காலம்தான் தீர்மானிக்கப்போகிறது. எண்ணம் தூய்மை என்றால் அனைத்து முயற்சிகளும் திருவினையாக்கும் என்பது வரலாறுகளிருந்து கற்றுக்கொள்ளப்பட்ட பாடகங்களாக நம்முன் காணப்படுவதையும் சுட்டிக்காட்டித்தான் ஆக வேண்டும்.

வீரகேசரி – 21.07.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here