மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது

0
311

மொணராகல பகுதியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாறு மற்றும் தகவல் தொழிநுட்பம் கற்பிக்கும் ஆசிரியர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வரலாறு பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் குறித்த மாணவியை வீட்டிற்கு அழைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதுடன் பின்னர் தனது நண்பரான தகவல் தொழிநுட்ப ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பின்னர் குறித்த சந்தேக நபர் தன்னுடைய தொலைபேசியில் எடுத்த காணொளியை சமூக வலைத்தளத்தில் (Facebook ) பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஆசிரியர்கள் இருவரும் இதற்கு முன்னரும் இன்னும் பல மாணவிகளை துஷ்பிரயோங்கள் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை இன்று (25) மொணராகல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதுடன் மொணராகல குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here