ஓட்டமாவடி – மீராவோடையில் இலவச கண் சிகிச்சை முகாம்

0
471

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்இய்யதுஷ் ஷபாபின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மேற்படி கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 29/07/2018ம் திகதி ஞாயிற்றுக் கிழமை பி.ப. 04.00 மணிக்கு மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

இதில் கண்களில் வெள்ளை படர்தலுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பரிசோதனை இடம்பெறவுள்ளது. குறித்த நோய் உறுதி செய்யப்படும் பட்சத்தில் அதற்கான சத்திர சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படவுள்ளது.

எனவே, குறித்த நோயினால் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதர சகோதரிகளும் இன, மத பேதமின்றி கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

மேலதிக தகவல்களுக்கு 0776054612 / 0771780281 எனும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

சமூக சேவைப் பிரிவு
JDIK.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here