ஓட்டமாவடி பிரதேச சபையின் நலன்புச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்வு

0
118

(முஹம்மத் றிழா)

ஓட்டமாவடி பிரதேச சபையின் உத்தியோகத்தர், ஊழியர்களின் நலன்புரிச் சங்கம் ஏற்பாட்டு செய்திருந்த உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் வருடாந்த ஒன்றுகூடலும் பகற்போசன விருந்துபசார நிகழ்வும் 2018.07.21ம் திகதி சனிக்கிழமை வாகனேரி, உச்சோடைக்கல்லில் இடம்பெற்றது.

இதன்போது, சபையில் கடமையாற்றி ஓய்வுபெற்ற, இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

சபையின் தவிசாளர் ஐ.டி.அமிஸ்டீன் (அஸ்மி), பிரதித் தவிசாளர் யூ.எல்.அகமட், செயலாளர் எம்.எச்.எம்.ஹமீம், சபை உறுப்பினர்கள் உட்பட உத்தியோகத்தர், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் குடும்ப சகிதம் கலந்துகொண்டது விசேட அம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here