வியூகம் ரீ.வி.யின் 3 ஆண்டு பூர்த்தி விழா

0
324

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

வியூகம் முகநூல் தொலைக்காட்சியின் மூன்றாண்டு பூர்த்தி நிகழ்வுகள் மற்றும் வியூகம் இணையத்தள அறிமுக விழா சனிக்கிழமை (28) இரவு 7.30க்கு சாய்ந்தமருது பேர்ள்ஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

வியூகம் ஊடக வலையமைப்பின் ஏற்பாட்டில், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெறும் இவ்விழாவில், பிரதம அதிதியாக இனநல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானா கலந்து கொள்கிறார்.

நிகழ்வில், ஊடக அதிதியாக வசந்தம் தொலைக்காட்சியின் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான எம்.எஸ்.எம். முஷர்ரப் மற்றும் கௌரவ அதிதிகளாக அபிவிருத்தி உபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.எல்.எம். சலீம், பிரதான மோட்டார் பரீட்சகர் ஏ.எல்.எம். பாரூக், இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியலாளர் எம்.ஆர். பர்ஹான் ஆகியோர் கலந்து கொள்வதோடு, சிறப்பு அதிதிகளாக சமூக சிந்தனையாளரும் வர்த்தகருமான எம்.எச்.எம். இப்றாஹீம், பிரபல தொழிலதிபர் எம்.எச்.எம். நாஸர் ஆகியோர் கலந்து கொள்வர்.

மூன்றாண்டு பூர்த்தியான நிகழ்வுகள், செய்திக்கான இணையத்தள அறிமுகம், ‘கடந்து வந்த பாதை’ என்ற தொனிப்பொருளில் நினைவு மலர் வெளியீடு மற்றும் ‘குப்பை மனசு’ எனும் சமூக விழிப்புணர்வு குறும்பட வெளியீடு ஆகியன அன்றைய நிகழ்வில் இடம்பெறவுள்ளன.

நிகழ்வில் முக்கிய அம்சமாக, கல்வி, சமூக, சமய, கலை, கலாசார, இலக்கிய, ஊடக வளர்ச்சிக்கு உன்னத பங்களிப்பு நல்கியமைக்காக இனநல்லுறவுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் தலைவர் அஷ்ஷெய்க். அப்துல் காதர் மசூர் மௌலானாவுக்கு வியூகம் ஊடக வலையமைப்பினால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here