முதலாவது உத்தியோகபூர்வ ஹஜ் யாத்திரிகர்கள் ஜித்தா பயணம்

0
216

இலங்கையிலிருந்து புனித ஹஜ் யாத்திரிகைக்கு செல்லும் முதலாவது உத்தியோகபூர்வ குழுவினர் நேற்று (26) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜித்தா நோக்கி பயணித்தனர்.

இவர்களை வழியனுப்புவதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம், பிரதியமைச்சர்களான பைசால் காசிம், செய்யத் அலிஸாஹிர் மெளலானா உள்ளிட்டோர் கொண்டனர்.

இம்முறை புனித ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து 3000 பேருக்கு ஹஜ் கடமைக்கு செல்வதற்கு வாய்ப்புக் கிடைத்துள்ளது. அவர்களில் 300 பேர் அடங்கிய முதலாவது உத்தியோகபூர்வ குழுவினரே நேற்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்லிருந்து ஜித்தா நோக்கி பயணித்தனர்.

ஊடகப்பிரிவு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here