ஓட்டமாவடியில் முதன்முதலாக விளையாட்டுத்துறை விஞ்ஞான,முகாமைத்துவ பட்டப்பாடநெறிக்காக ஆதில் பல்கலைக்கழகத்திக்கு தெரிவு

0
658

(அ.ச.முகம்மது சதீக்)

ஓட்டமாவடியைச் சேர்ந்த முகம்மட் சாதிக்கீன் முகம்மட் ஆதில் என்ற மாணவர் விளையாட்டுத்துறை விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பட்டப்பாடநெறிக்காக பல்கலைக்கழகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.எமது கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்றாவது மாணவரும் ஓட்டமாவடி மண்ணின் முதலாவது மாணவரும் ஆவார்

இம்மாணவர் கடந்த 2017 ம் வருடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் வணிக பிரிவில் தோற்றி சித்தியடைந்தார்.
தற்காப்பு கலையின் மிகச்சிறந்த விருதுகளை மாகாண மட்டத்தில் பெற்றதின் காரணமாக இவருக்கு விளையாட்டுத்துறை விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பாடநெறிக்காக தெரிவு செய்யப்பட்டள்ளார்.

இவர் நெய்னா முகம்மட் சாதீக்கின் ஆசிரியர் முகம்மது கனி நுபைஸா ஆகியோரின் மூத்த புதல்வரும் .ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் கணித விஞ்ஞான பிரிவின் பகுதித்தலைவர் மு.க நவாஸ் ஆசிரியரின் மருமகனுமாவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here