நல்லாட்சி ஏற்படுத்திய நல்லிணக்கம் என்ன என்பதை முழு நாடே அறியும் ; நாமல் ராஜபக்‌ஷ

0
285

இலங்கையில் இணங்களுக்கு இடையே இடம்பெற்ற அனைத்து பாரிய இனமோதல் சம்பவங்களுக்கு பின்னணியிலும் ஐக்கிய தேசிய கட்சியின் சதியே இருந்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறுகையில்,

1983 க்கு பிறகு முதல் முறையாக நல்லாட்சியில் இனங்களுக்கு இடையே நல்லிணக்கம் ஏற்றப்பட்டுள்ளது என பிரதமர் கூறியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இணங்களுக்கு இடையேயான அனைத்து பாரிய வன்முறைகளுக்கும் பின்னணியில் ஐக்கிய தேசிய கட்சியே இருந்துள்ளது என்பதை நாம் அவருக்கு இந்த நேரத்தில் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

இலங்கை வரலாற்றில் மிகப்பெரும் கருபுள்ளியாக அமைந்த கருப்பு ஜூலை கலவரம் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்காலத்திலேயே இடம்பெற்றது. இதனை அப்போதய ஐக்கிய தேசிய கட்சி அரசு கட்டுப்படுத்தாமல் எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றியது. அதுமட்டுமல்லாமல் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியே இந்த வண்முறைகளை தூண்டிவிட்டதும் தெளிவானது என்பதை நாம் பிரதமருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

கடந்த மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் கடைசித்தருவாயில் திட்டமிட்ட அலுத்கமை கலவரம் இடம்பெற்றது.அந்த கலவரத்தை காட்டி ஆட்சிக்கு வந்த இந்த நல்லாட்சி அரசு கலவரம் நடந்து நான்கு வருடங்கள் கடந்தும் இதுவரை எந்த ஒரு விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை.

நாமும் பல தடவைகள் அலுத்கமைக்கு விசாரணை கமிஷன் ஒன்றை நியமிக்க கோரிய போதும் நான்கு வருடங்கள் கழிந்தும் அரசு அதனை இதுவரை கண்டுகொள்ளவில்லை.ஆகவே அலுத்கமை கலவரமும் இந்த அரசாங்காத்தின் ஆட்சிக்கவிழ்ப்பு சதி என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

மேலும் இந்த அரசாங்க காலத்தில் நல்லிணக்கம் ஏற்பட்டதாக கூறும் பிரதமர் கடந்த 3 வருடங்களில் இணங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்பட்ட விதம் தொடர்பிலும் இணங்களுக்கு இடையே இடம்பெற்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த அரசு செயற்பட்ட விதம் தொடர்பில் நாம் தெளிவுபடுத்த தேவையில்லை அதனை மக்கள் மன்றத்தின் தீர்ப்பிற்கே விடுகிறோம்.

ஊழலை ஒழித்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும் இணங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாகவும் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் அனைத்து விடயங்களிலும் பெயிலாகிவிட்டது என அவர் குறிப்பிட்டார்.

JOINT OPPOSITION TAMIL MEDIA UNIT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here