கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாம்

0
408

(எச்.எம்.எம்.பர்ஸான்)

இனங்களுக்கிடையில் நல்லுறவை ஏற்படுத்தும் நோக்கில் ஜம்இய்யதுஷ் ஷபாபின் அனுசரணையில் கல்குடா ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமிய்யாவின் சமூக சேவைப் பிரிவு ஏற்பாடு செய்த இலவச கண் சிகிச்சை முகாம் இன்று 29 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கண்களில் வெள்ளை படர்தலுக்கான சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கான பரிசோதனை இடம்பெற்றது. குறித்த நோய் உறுதி செய்யப்பட நோயாளர்கள் அதற்கான சத்திர சிகிச்சையினை இலவசமாக மேற்கொள்வதற்கு எதிர்வரும் 31 ம் திகதி  காத்தான்குடி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளர்.

குறித்த நோயினை பரிசோதிப்பதற்காக பாகிஸ்தான் நாட்டைச்சேர்ந்த வைத்திய நிபுணர்கள் வருகைதந்து நோயாளிகளை பரிசோதித்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here