103 வருடங்களாக பாதுகாக்கப்படும் அமானிதப்பணம்

0
272

(M.I. MUHAMMADH SAFSHATH, UNIVERSITY OF MORATUWA)

அப்போது 1915. முதலாம் உலகப் போர் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. போருக்காக உஸ்மானியப் பேரரசின் போர் வீரர் ஒருவர் பாலஸ்தீனில் இருந்து தயாராகிக் கொண்டிருக்கிறார்.

தன்னிடம் உள்ள பெருந்தொகையான பணத்திற்கு நம்பிக்கையாளர் ஒருவரை ஆதரவு வைக்கிறார். பாலஸ்தீன வியாபாரி ருஸ்தி எபந்தி அந்த வீரரின் நம்பிக்கைக்கு பாத்திரம் ஆகிறார்.

அந்த வியாபாரியிடம் தன்னிடம் இருந்த பணத்தை எல்லாம் அளித்து தான் போருக்கு செல்லவுள்ளதாகவும் வரும் வரை அதை அமானிதமாக பேணித் தருமாறும் கையளித்துச் செல்கிறார்.

காலங்கள் கடந்தோடியது; போரும் முடிவடைந்து; பல காலங்கள் தாமதித்தும் அந்த வீரர் பணத்தை மீளப் பெற வரவே இல்லை. வியாபாரி ருஸ்தியிடம் இருந்து அந்தப் பணத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவரது சகோதரனின் மகன் ராகிப் அல்அலுல் இடம் வருகிறது.

தற்போது ராகிபின் வயது 71. பணம் கையளிக்கப்பட்டு 103 வருடங்கள் கடந்தோடியது. 140,000 லீராக்கள் பெறுமதியான அந்தப் பணம் 1915 இல் ஒரு வியாபாரியால் உஸ்மானியப் போர் வீரருக்கு அளிக்கப்பட்ட வாக்குக்காக 103 ஆண்டுகள் தாண்டியும் அந்தக் குடும்பத்தால் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

1516 முதல் 1917 இல் பிரித்தானிய கைப்பற்றும் வரை பாலஸ்தீனம் உஸ்மானியப் பேரரசின் ஆளுகையின் கீழ் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here