இன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம் எல்லோரையும் அழுத்தி நிக்கிறது – கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி

0
425

(எச்.எம்.எம்.பர்ஸான்)       

இன்றைய காலகட்டத்தில் இஸ்லாத்தோடும், ஈமானோடும் படைத்த இறைவனோடும் எங்களது சமூகத்தை தொடர்பு படுத்திவைக்க வேண்டிய, அது தொடர்பான வழிவகைகள் பற்றி நாம் சிந்திக்க வேண்டிய அதிக அவசியமும் கடமைப்பாடும் எமக்கு இருக்கிறது. என வாழைச்சேனை மத்தி பிரதேச செயலக கலாசாரா உத்தியோகத்தரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவருமான ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற மாஞ்சோலை அர் ரஹ்மா குர்ஆன் கலாசாலையின் மாணவர் வெளியேற்று விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும்போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் அங்கு பேசுகையில்,

நாங்கள் வாழ்கின்ற இந்த சூழல் பெரும்பாளான முஸ்லிம்கள் இஸ்லாமியக் கொள்கைகளிலிருந்து தூரப்பட்டு, இஸ்லாமிய வணக்க வழிபாடுகளிலிருந்து தூரப்பட்டு, இஸ்லாமிய பண்பாடுகளிலிருந்து தூரப்பட்டு இஸ்லாம் சொல்லுகின்ற குடும்ப வாழ்க்கை முறைகளிலிருந்து தூரப்பட்டு, இஸ்லாம் சொல்லுகின்ற கொடுக்கல் வாங்கல் தொழில் முயற்சிகள் நடைமுறைகளிலிருந்து தூரப்பட்டு வாழ்கின்றவொரு காலகட்டத்திலேயே நாங்கள் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

எனவே இன்றைய காலத்தில் என்றுமில்லாதவாரு மிகவும் அதிகமதிகமாக இஸ்லாத்தைப்பற்றி, இஸ்லாத்தின் போதனைகளைப் பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டியவொரு தேவைப்பாடு நம் எல்லோரையும் அழுத்தி நிக்கிறது இன்றிருக்கும் முஸ்லிம்களில் அதிகமானவர்களுக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகள் பற்றிய அறிவு இல்லாதவொரு நிலை, இஸ்லாமிய வணக்க வழிபாடுகள் பற்றிய ஆழமான அறிவும் விளக்கமும் இல்லாத நிலை, இஸ்லாமிய பண்பாடு பழக்கவழக்கங்கள் பற்றி ஒரு ஆழமான புரிதல் இல்லாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற பெரும்பாலும் பேரளவிலானவொரு முஸ்லிம் சமூதாயமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றவொரு நிலையை இன்றைய சூழ்நிலையில் நாம் அதிகமாகப் பார்க்கலாம்.

குறிப்பாக இன்று வளர்ந்து வருகின்ற ஒரு இளம் தலைமுறை இஸ்லாத்துக்குச் சம்மந்தமில்லாத, இஸ்லாத்தோடு எந்தவிதமான பற்றுதளில்லாத, இஸ்லாமிய பண்பாடுகளோடு எந்தவிதமான நெருக்கமுமில்லாதவொரு சூழலில் இன்று வளர்ந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையை நாங்கள் பொதுவாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இன்று நம் வீடுகளில் இருக்கின்ற நமது பிள்ளைகளின் இஸ்லாமிய அறிவும் இஸ்லாத்தின் பற்றுதல்கள் ,இஸ்லாத்தின் கடமைகளை பேனுவதில் இருக்கின்ற கவனம் போன்ற விடயங்களையெள்ளாம் நாங்கள் சிந்தித்துப் பாக்கின்ற போது நிறையவே இஸ்லாத்தைப் பற்றி இன்றைய முஸ்லிம் சமுதாயத்திக்கு பேசக் கடமைப்பட்டிருக்கின்றோம். இன்று வாழுகின்ற பல முஸ்லிம்களை நீங்கள் பார்த்தீர்களென்றால் பெயரலவிலேதான் அவர்கள் முஸ்லிம்களாக இருக்கின்றார்கள் அவர்கள் அழகான இஸ்லாமியப் பெயர்களை வைத்திருப்பார்கள் ஆனால் அந்தப் பெயர்களுக்கும் அவர்களுடைய வாழ்க்கை முறைகளுக்கும் எவ்வித சம்மந்தமுமில்லாமல் இருக்கின்றவொரு நிலையை பலருடைய வாழ்வில் நாம் பார்க்கின்றோம். பல நேரங்களில் எமது அண்டை அயல் கிராமங்களில் வாழ்கின்ற ஒரு மாற்று மதத்தவரடத்தில் என்னவெல்லாம் இருக்குமோ அத்தனை காரியங்களும் நம் சமூகத்தில் இருக்கும் நாம் பார்க்கலாம்.

எனவே இந்த சமூதாயத்திக்கு அதிகமாக இஸ்லாத்தின் கொள்கையைப் பற்றி இஸ்லாமிய நம்பிக்கைகளைப் பற்றி சொல்லிக் கொண்டுதான் இருக்க வேண்டும் நாங்கள் சொல்லுவதை விடுவோமாகவிருந்தால் அடுத்த தலைமுறை இந்த நம்பிக்கைகள் புரியாமல் இஸ்லாத்தின் அடிப்படையான கொள்கைகளைப் பற்றித் தெரியாமல் மாற்று சமூதாயத்துடைய அத்தனை கொள்கைகளையும் உள்வாங்கிக் கொள்கின்ற ஒரு சமூதாயமாக நாம் இருந்துவிட முடியும்.

எனவே இவ்வாறான காரியங்களை நாம் கண்டு கொள்ளாமல், கவனத்திற் கொள்ளாமலிருந்தால் சிலநேரம் யாருடைய வீட்டுக்குல் எந்தப் பூகம்பம் வெடிக்குமென்று தெரியாது அப்படியான ஆபத்தான எதிர்காலத்தை நோக்கி நம் சமூதாயம் சென்றுகொண்டிருக்கிறது. – என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here