ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இம்முறை உயர்தரத்தில் 5 மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கும் 3 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் தெரிவு

0
312

(MI. MUHAMMADH SAFSHATH
UNIVERSITY OF MORATUW)

கல்குடா பிரதேச விஞ்ஞானக் கல்வியின் மூன்னோடிப் பாடசாலை மட்/ மம/ ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் இம்முறை 5 மாணவர்கள் பொறியியல் பீடத்துக்கும் 3 மாணவர்கள் மருத்துவ பீடத்திற்கும் தெரிவாகியுள்ளனர்.

பொறியியல் பீடத்துக்கு தெரிவான எஸ்.எம்.எம். ஸியாம் மற்றும் எச்.ஏ. ஹாலிக் ஆகிய இரு மாணவர்களும் தீவளாவிய திறமைச் சித்தி அடிப்படையில் கணித முன்னோடிப் பல்கலைக்கழகமான மொரட்டுவை பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளமை பாடசாலைப் பெறுபேற்றை மென்மேலும் மெருகூட்டச்செய்துள்ளது.

இவை அடங்கலாக விஞ்ஞானப் பிரிவிலிருந்து 18 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ளதோடு, மேலும் சுமார் 10 மாணவர்கள் இரண்டாம் பட்டியலில் தேர்வு எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்கள் விபரம்.

மருத்துவ பீடம்
1. எம்.எம்.ஏ. அபாஸ் – களனி பல்கலைக்கழகம்
2. எம்.எம்.எப். ஹப்னா – கிழக்கு பல்கலைக்கழகம்
3. ஏ.என்.எப். நிஸ்ரா ரினோ – கிழக்கு பல்கலைக்கழகம்

பொறியியல் பீடம்
4. எஸ்.எம்.எம். ஸியாம் – மொரட்டுவை பல்கலைக்கழகம்
5. எச்.ஏ. ஹாலிக் – மொரட்டுவை பல்கலைக்கழகம்
6. ஏ.எச்.எஸ்.எம். றம்ஸீன் – ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
7. ஏ.எல்.எப். சஸ்னா – தென்கிழக்கு பல்கலைக்கழகம்
8. ஐ. அஸாம் – யாழ் பல்கலைக்கழகம்

பௌதிக விஞ்ஞானம்
9. எம்.எஸ்.எம். ரின்ஸான் – யாழ் பல்கலைக்கழகம்
10. ஏ.டபிள்யு. டில்ஷாத் – தென்கிழக்கு பல்கலைக்கழகம்

பிரயோக விஞ்ஞானம்
11. எம்.எப். பஸ்னா – ரஜரட்ட பல்கலைக்கழகம்

யூனானி மருத்துவம்
12. எம்.பீ.எப். ஹஸீனா – கொழும்பு பல்கலைக்கழகம்

சுகாதார மேம்பாடு
13. எம்.ஆர்.எப். ரஸ்பா – ரஜரட்ட பல்கலைக்கழகம்

விவசாயம்
14. என்.எப். ஸதீகா – கிழக்கு பல்கலைக்கழகம்

உணவு விஞ்ஞான தொழில்நுட்பம்
15. ஏ.ஏ.எப். அக்ரம் – சபரகமுவ பல்கலைக்கழகம்

விலங்கு விஞ்ஞானமும் மீன்பிடியும்
16. எம்.ஐ.எப். அஸ்கா – பேராதனைப் பல்கலைக்கழகம்

தாதியியல்
17. எம்.ஐ.எம். இப்ஸான் – யாழ் பல்கலைக்கழகம்

விவசாய ஏற்றுமதி
18. என்.எம். ஸஜாத் கான் – ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

மேற்படி மாணவர்களை வழிநடாத்திய பாடசாலை அதிபர், நிருவாகம், ஆசிரியர்கள் மற்றும் வகுப்புக்களை நடாத்தும் எகோ (ECGO) அமைப்பினருக்கும் தெரிவான பிள்ளைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

MI. MUHAMMADH SAFSHATH
UNIVERSITY OF MORATUW

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here