சிறப்பாக நடைபெற்ற றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் கிழக்கு மாகாண சூறா சபையின் அமர்வு

0
448

(எச்.எம்.எம்.பர்ஸான்)

சுமார் ஆறு வருடமாக கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி மிகவும் சிறப்பான முறையில் இயங்கி வரும் றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் கிழக்கு மாகாண சூறா சபை உறுப்பினர்களுக்கான அமர்வு நிந்தவூரில் அமைந்துள்ள றாபிதாவின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (4) நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் வைத்தியக் கலாநிதி ரயிசுதீன் ஷரஈ அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ் அமர்வில் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த உலமாக்கள் உட்பட ஏறாளமான சூறா சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில், சமகால தஃவாக் களம் மற்றும் எதிர் காலத்தில் தஃவாப் பணியை முன்னெடுப்பது தொடர்பான பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் றாபிதது அஹ்லிஸ் ஸுன்னாவின் பிரதித் தலைவரும் மருதமுனை தாருல் ஹுதா மகளிர் அரபுக் கல்லூரியின் பணிப்பாளருமாகிய அஷ்ஷெய்க் எம்.எல். முபாரக் மதனி, றாபிதாவின் உப தலைவரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் பொதுத் தலைவருமாகிய அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காசிமி, மற்றும் தியாவட்டவான் தாருஸ்ஸலாம் கலாபீட அதிபர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி, கின்னியா மாவட்ட றாபிதாவின் தலைவர் ரபீஸ் மதனி ஆகியோர்கள் சிறப்புரைகளை நிகழ்த்தினார்கள்.

அத்தோடு ஒவ்வொரு ஊர்களிலும் நடைபெற்று வரும் தஃவாப் பணிகள் பற்றியும் எதிர் காலத்தில் அந்தந்தப் பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பாகவும் அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த உறுப்பினர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here