மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் இளைஞர்களை கட்டுப்படுத்த அனைவரும் முன்வரவேண்டும் – உப தவிசாளர் யூ.எல்.அஹமட்.

0
502

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா பகுதிகளில் பல பிரதேசங்களிலும் பிரத்தியேக வகுப்புகளுக்கு கல்வி கற்கச் செல்லும் மாணவிகளுக்கு தொல்லை கொடுக்கும் இளைஞர்களை கட்டுப்படுத்த அனைவரும் முன்வர வேண்டும் என்று ஓட்டமாவடி பிரதேச சபையின் உப தவிசாளர் யூ.எல். அஹமட் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

மாணவிகள் தங்களது கல்வி நடவடிக்கைகளுக்காக பிரத்தியேக வகுப்புகளுக்குச் செல்லும் போது சில இளைஞர்கள் வழிமறித்து பல்வேறுபட்ட தொல்லைகளை கொடுப்பதோடு அம் மாணவிகளிடம் வேண்டத் தகாத வார்த்தைப் பிரயோகங்களையும் கூறுகின்றனர் இதனால் அம் மாணவிகள் பல்வேறு சங்கடத்துக்குள்ளாவதாக தெரிய வருகிறது.

குறித்த மாணவிகளை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து இவ்வாறான சமூக விரோதச் செயலில் ஈடுபடும் இளைஞர்கள் விடயத்தில் கண்டிப்பாக அவர்களுடைய பெற்றோர்கள் கவனஞ் செலுத்துவதோடு தன்னுடைய பிள்ளை எங்கே செல்கின்றான் எந்த நண்பர்களோடு தோழமை வைத்துள்ளான் என்பதை ஒவ்வொரு பெற்றோர்களும் கண்காணிக்க வேண்டும்.

அத்தோடு இவ்வாறான செயல்களில் ஈடுபடும் இளைஞசர்களை பிரதேசத்திலுள்ள சமூக நிறுவனங்கள், பள்ளிவாயல்கள், பொலிஸ் நிலையங்கள் ஒன்றினைந்து கட்டுப்படுத்த அனைவோரும் முன்வரவேண்டும் என்று பிரதித் தவிசாளர் யூ.எல்.அஹமட் வேண்டிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here