மீராவோடை அஞ்சல் அலுவலக உப தபாலதிபர் எஸ்.ஏ.ஹமீட் 23 வருட சேவையிலிருந்து ஒய்வு.

0
305

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை உப அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரிந்துவந்த உப தபாலதிபர் எஸ்.ஏ.ஹமீட் தனது 23 வருட கால தபாலக சேவையிலிருந்து இம்மாதம் 11ம் திகதி சனிக்கிழமை ஒய்வு பெற்றுச் சென்றுள்ளார்.

இவர் 1990ம் ஆண்டு 3ம் மாதம் 24ம் திகதி தபாலக சேவையில் தற்காலிகமாக இணைக்கப்பட்டு புணானை அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றியதோடு பின்னர் 1995ம் ஆண்டு 7ம் மாதம் 24ம் திகதி நிரந்தர நியமனம் பெற்று மீராவோடை உப அஞ்சல் அலுவலகத்தில் தனது கடமையினை திறன்பட நிறைவேற்றி வந்தார்.

இவரது அயராத முயற்சியினால் தற்காலிக இடத்தில் இயங்கிவந்த குறித்த அஞ்சல் அலுவலகத்துக்கு நிரந்தரக் கட்டடம் கிடைக்கப்பெற்றதொடு அவ் அலுவலகத்தில் பொது மக்கள் தங்களின் தேவைகளை இலகுவான முறையில் பெற்றுக்கொள்ள பல்வேறுபட்ட வசதிவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார்.

அத்தோடு அரசியல் தலைவர்கள் மற்றும் நிறுவனங்கள், தனவந்தர்களின் உதவிகளை பெற்று குறித்த அஞ்சல் அலுவலகத்துக்கு தன்னால் முடிந்த பல்வேறு தேவைகளை நிவர்த்தி செய்து கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here