புகையிரத சாரதிகளுக்கு வைத்தியர்களை விட அதிக சம்பளம்

0
241

இந்த நாட்டு தொழிற்சங்கம் ஒன்று செய்த நியாயமற்ற வேலை நிறுத்தம் என்றால் அது இம்முறை புகையிரத வேலை நிறுத்தம் என்றும் சில அரசியல்வாதிகள் இந்த வேலை நிறுத்தத்தை தூண்டு விடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

நேற்று (11) பெலியத்தை சிட்டினாமலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதுபோன்ற காட்டுமிராண்டி தனமான வேலை நிறுத்தம் ஒன்று இதற்கு முன்னர் இடம்பெற்றதாக நான் நினைக்கவில்லை என்றும்இ திடீரென்று வேலை நிறுத்தம் செய்ததாகவும் அவர் கூறினார்.

புகையிரத சாரதிகள் மாதம் ஒன்றுக்கு பெறும் சம்பளம் வைத்தியர்கள் பெறும் சம்பளத்தை விடவும் அதிகமானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவற்றின் அடிப்படை நோக்கம் அரசியல் தவிர வேறொன்றுமில்லை என்றும், இவர்களுக்கு ஒட்சிசன் வழங்கி தூண்டடி விடுவது அரசியல்வாதிகளே என்றும் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here