பொண்டுகள்சேனை ஆற்றை பொது மக்கள் தங்களது பொலுது போக்கிற்காக பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளவும் – வாழைச்சேனை பிரதேச சபை

0
529

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

பெரியகோராவளி புனித கங்கை நீரை அசுத்தப்படுத்துவதால் பொண்டுகள்சேனை ஆற்றை பொது மக்கள் தங்களது பொலுது போக்கிற்காக பாவிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு விளம்பரப்பலகையை கோறளைப்பற்றுப் பிரதேசசபை அப்பகுதியில் காட்சிப்படுத்தியுள்ளது.

கோறளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் காளிக்குட்டி நடராசா பிரதேச சபையில் முன்வைத்த கோறிக்கைக்கு அமைவாக சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் சென்ற குழுவினர் தடை உத்தரவு பெயர் பலகையை காட்சிப்படுத்தியுள்ளர்.

மகாவலி கங்கையின் கிளையாக முந்தனை ஆற்றுடன் இணையும் பொண்டுகள் சேனை ஆற்றோரமாக நகர்ப்பகுதியிலிலுந்துவரும் இளைஞர்கள் சிறுவர்கள் என பொதுமக்கள் பலரும் பொண்டுகள்சேனை ஆற்றோரமாக தற்காலிக முகாமிட்டு மாமிச உணவுகளை சமைத்தும் மது அருந்தியும் நீராடியும் பிளாஸ்ரிக் பொருட்களை விட்டு செல்வதாலும் களியாட்டங்களில் ஈடுபடுவதும் நீண்டகாலமாக நடைபெற்றுவந்த நிலையில் இத்தகைய தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பெரியகோராவெளி கண்கியம்மனின் திருக்குளித்தியின் புனித தீர்ததமாக இந்த ஆற்று நீரையே பயன்படுத்துவதனாலும் அப்பிரதேச மக்களின் கால்நடைகளின் வனவிலங்குகளின் குடிநீராகவும் பயன்படுவதாலும் நன்நீர் மீன்வளம் பாதிக்கப்படுவதாலும் இந்நீரின் பயன்பாடு பலகோணத்திலும் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையிலேயே இத்தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று பிரதேச சபை தவிசாளர் ஸோபா ஜெயரஞ்சித் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கோறளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் சிற்றம்பலம் கிருபாகரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here