மின்சாரம் தாக்கி சிகிச்சை பெற்றுவந்த மீராவோடை ஏ.ஜீ.ஜெமீல் வபாத்

0
308

(எச்.எம்.எம்.பர்ஸான்)

ஓட்டமாவடி – மீராவோடை 04 நூரானியா வீதியில் வசித்துவரும் அப்துல் கபூர் ஜெமீல் என்பவர் மின்சாரம் தாக்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று (18) ம் திகதி மரணித்துள்ளார்.

இவ்விடையம் பற்றி தெரியவருவதாவது,

கட்டுமான தொழில்புரியும் இவர் கடந்த வியாழக்கிழமை (15) ம் திகதி கட்டுமானப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போது மின் இணைப்பு பொருத்தப்பட்டிருந்த வயர் தலைப்பகுதியில் பட்டதன் காரணமாக மயக்கமடைந்து வீழ்ந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான இருபத்தியெட்டு வயதுடைய அப்துல் கபூர் ஜெமீல் சிகிச்சை பலனின்றி இன்று (18) ம் திகதி சனிக்கிழமை மரணித்துள்ளார்.

அன்னாரின் ஜனாஸா தொழுகை இன்று அஷர் தொழுகையின் பின்னர் மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயலில் நடைபெறும். 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here